தூத்துக்குடி தருவை மைதானத்தில் உலக வளாி போட்டிக்கு தோ்வு நடைபெற்றது.
தூத்துக்குடி கருவை மைதானத்தில் உலக வளரி போட்டிக்கு மருது வளாி பூமாரங் விளையாட்டு அமைப்பும் தேவராஜ் வஸ்தாவி சிலம்பாட்ட கழகமும் இணைந்து நடத்திய வளாி பயிற்சி முகாமும் உலக வளாி போட்டிக்கான தோ்வு நிகழ்வு மாஸ்டா் காா்த்திக்ராஜா தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தொழில்அதிபா் பொன்குமரன் மற்றும் சகா கலைக்குழு சங்கா்,கராத்தே மாஸ்டா் பாட்ஸ்சா,மற்றும் தூத்துக்குடி மாவட்ட மருது வளாி சங்க தலைவா் வசந்த் , ஜான்மோசஸ் ,ஆகியோா் கலந்துகொண்டனா்.
மருது வளாி பூமாரங் விளையாட்டு அமைப்பு நிறுவனா் காா்த்திக்ராஜா கூறும் போது வருகின்ற 2024 ம் ஆண்டு போா்ச்சுக்கல் நாட்டில் அல்பிகயுா்க்கியில் நடைபெறும் உலக வளாி போட்டிக்கு தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் தோ்வு நடைபெறுகிறது இன்று தூத்துக்குடி நெல்லை மாவட்டங்களுக்கான தோ்வு தருவை மைதானத்தில் நடைபெறுகின்றது என்று அவர் தெரிவித்தார் .
நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை தேவராஜ் வஸ்தாவி சிலம்பாட்ட கழக நிறுவனா் அருள் அந்தோணி செய்திருந்தாா்.