ஒட்டப்பிடாரம் மலைப்பட்டியில் கோவில் திருவிழாவை முன்னிட்டு மின்னொளி கபாடி போட்டி - யூனியன் சேர்மன் ரமேஷ் தொடங்கி வைத்தார்.
ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் மலைப்பட்டி கிராமத்தில் தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ காளியம்மன், ஸ்ரீ சுடலைமாடன், ஸ்ரீ கருப்பசாமி, ஸ்ரீ மாடசாமி திருக்கோவில் ஆடித்திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற மாபெரும் மின்னொளி கபாடி போட்டியில் இறுதிப்போட்டியை ஒட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தார்.
மேலும் இறுதிப் போட்டியில் முதலிடம் பிடித்த இளவேலங்கால் முத்தாரம்மன் கபாடி குழு அணிக்கு பரிசுத்தொகை ரூ.25000/- வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி கிழவிப்பட்டி கதிரேசன் ஊராட்சி மன்ற தலைவர்கள் இக்பால் என்ற சின்ன மாரியப்பன் அருண்குமார் ஒன்றிய பொறியாளர் அணி மணிகண்டன் இளைஞரஅணி சிலம்பு சூர்யா கிளைச் செயலாளர்கள் பெருமாள் கணேசன் செபாஸ்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.