சிங்கப்பூரில் நடைபெற்ற உலக அளவிலான சிலம்பப் போட்டியில் திருச்செந்தூர் ஆலன் திலக் கராத்தே மற்றும் சிலம்ப பள்ளி மாணவர்கள் தங்கப்பதக்கங்களை வென்று அசத்தல்.
பரிசு பெற்ற திரும்பிய மாணவருக்கும்,மாணவிக்கும் மற்றும் பயிற்சியாளருக்கும் திருச்செந்தூர் ரயில் நிலையத்தில் பொதுமக்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
சிங்கப்பூரில் நடைபெற்ற உலக அளவிலான சிலம்ப போட்டியில் பல்வேறு நாடுகளில் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் திருச்செந்தூர் ஆலன் திலக் கராத்தே மற்றும் சிலம்ப பள்ளி மாணவர்கள் மதுமிதா இரட்டை கொம்பு சுற்றில் தங்கப்பதக்கமும் சிவக்குமார் ஒற்றை கொம்பு சுற்றில் தங்கப்பதக்கமும் வென்று அசத்தியுள்ளனர்.
இந்த போட்டிக்கு பயிற்சி அளித்த ஆலன் திலக் கராத்தே மற்றும் சிலம்ப பள்ளி மாஸ்டர் கராத்தே டென்னிசன் பயிற்சி அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.