தூத்துக்குடியில் கல்லூரி மாணவிக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை.

தூத்துக்குடியில் கல்லூரி மாணவிக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை.

தூத்துக்குடி மாநகராட்சி சுந்தரவேல் புரம் எட்டாவது தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணிய ராஜ் (45) இவர் 17 வயது சிறுமி ஒருவருக்கு தவறான எண்ணத்துடன் தொடர்ந்து செல்போன் மூலம் மெசேஜ் மற்றும் whatsapp மூலம் ஆபாச படங்களை அனுப்பி பாலியல் தொந்தரவு செய்து வந்துள்ளார்.

இதனால் மனமுடைந்த அந்தப் பெண் தற்கொலைக்கு முயன்று உள்ளார். அவரை மீட்ட உறவினர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.  

பெண்ணின் தாய் சுப்ரமணிய ராஜ் மீது வட பாகம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர் அதன் பெயரில் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்கு பதிவு செய்து சுப்பிரமணியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.