தூத்துக்குடி ஜார்ஜ் ரோடு அன்னை பைனான்ஸில் ரூ 87 லட்சம் மதிப்பிலான அடகு வைத்த தங்க நகைகளை ஜீவா,மகேஷ், ஷை மெசிங்டன் ஆகியோர் தர மறுப்பதாக - எஸ் பி அலுவலகத்தில் பெண் புகார் மனு.

தூத்துக்குடி ஜார்ஜ் ரோடு அன்னை பைனான்ஸில் ரூ 87 லட்சம் மதிப்பிலான அடகு வைத்த தங்க நகைகளை ஜீவா,மகேஷ், ஷை மெசிங்டன் ஆகியோர் தர மறுப்பதாக  - எஸ் பி அலுவலகத்தில் பெண் புகார் மனு.

தூத்துக்குடி 106A, காந்தி நகர், ஜார்ஜ் ரோட்டில் பகுதியில் வசித்து வரும் ஜெயராணி க/பெ. ஜியோ, என்பவர் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தூத்துக்குடி ஜார்ஜ் ரோடு அன்னை பைனான்ஸில் ரூ 87 லட்சம் மதிப்பிலான அடகு வைத்த தங்க நகைகளை ஜீவா,மகேஷ், 

ஷை மெசிங்டன் ஆகியோர் அடகு வைக்கப்பட்ட தங்க நகைகளுக்கு பணத்தை கொடுத்தும் அதற்கான வட்டியையும் கொடுத்தும் தங்க நகைகளை திரும்ப தர மறுப்பதாகவும் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் ஜெயராணி புகார் மனு அளித்துள்ளார்.

அவரது புகார் மனுவில் கூறியிருப்பதாவது; புன்னக்காயலை சேர்ந்த ஜியோ என்பவருக்கும் ஜெயராணி ஆகிய எனக்கும் கடந்த 2012 ஆம் ஆண்டில் திருமணம் நடைபெற்றது. எனது கணவர் கப்பலில் பணியாற்றி வருகிறார். எனக்கு உடல் நல குறைவு காரணமாக மேற்கண்ட முகவரியிலுள்ள எனது தாயார் வீட்டில் தங்கியிருந்து மருத்துவ சிகிச்சைகள் பெற்று வருகிறேன்.

நான் கடந்த 2017-ம் ஆண்டு எனக்குரிய நககளை SBI வங்கி, புன்னக்காயல் கிளையில் அடகு வைத்து எனது நகைகளை பெயரில் இடம் வாங்கினேன். எனது கணவருக்கு எங்கள் பகுதியை சேர்ந்த மெசிங்டன் த/பெ.ரவீந்திரன் என்பவர் நன்கு பழக்கமானவர். ஷை மெசிங்டன் என்பவரின் மனைவி ஜீவா என்பவர் எனக்கு கடந்த 10 வருடங்களாக அறிமுகமானவர். 

அவரும், அவருடைய நண்பர் மகேஷ் என்பவரும் 'அன்னை பைனான்ஸ் என்ற பெயரில் நகை அடகுக் கடை நடத்தி வருகிறார்கள். மேற்படி ஜீவாவும், மகேஷ் அவர்களும் எனது தாயார் வீட்டிற்கு வந்து SBI வங்கியில் உள்ள நகைகளை மேற்படியார்களிடம் வைக்குமாறும், மாதத் தவணை போல செலுத்தி குறைந்த வட்டியில் நகையை திருப்பிக் கொள்ளலாம் என்றும், தானே நகையை மீட்டு (Take-2-over) மறு அடகுக்கு எடுத்துக் கொள்வதாக கூறி எனது நகைகளை SB வங்கி, புன்னக்காயல் கிளையிலிருந்து மீட்டு மேற்படியார்களுக்குரிய"அன்னை பைனான்ஸ் "ல் அடகு பெற்றுக் கொண்டு அடகு சீட்டு கொடுத்தார்கள்.

பின்னர் நான் செலுத்தும் தவணைகளை ஜீவாவும், மகேஷ் அவர்களும் லெட்ஜரில் பதிவு செய்து வந்தார்கள். ரசீது ஏதும் கொடுத்ததில்லை பின்னர் எனக்கு உடல்நிலை மிகவும் மோசம் அடைந்ததனால் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகிறேன்.

அதுவகைக்கு அதிக பணம் தேவைப்பட்டதால் என்னுடைய நகைகள்,எனது உறவினர் நகைகள், இந்தியன் வங்கி பீச்ரோடு மெயின் கிளை மற்றும் முத்தூட் பைனான்ஸ், தூத்துக்குடி கிளையில் அடகு வைக்கப்பட்டிருந்த நகைகள் என அனைத்தையும் ஜீவாவும், மகேஷ்ம் அடகு பெற்றுக் கொண்டு ரசீது கொடுத்து வட்டியை கழித்து விட்டு மீதத் தொகையை ரொக்கமாக கொடுத்தார். 

அடகு வகைக்கு நான் செலுத்திய தவணைத் தொகைக்கு இதுவரை ரசீது கொடுக்கவில்லை. நான் கேட்டதற்கு நகையை எப்போது வேண்டுமானாலும் திருப்பிக் கொள்ளலாம் என உறுதிபட தெரிவித்துவந்தனர். 

பின்னர் மேற்படி ஜீவா மற்றும் மகேஷ் இருவரும் எங்கள் தாயார் வீட்டிற்கு அடிக்கடி வந்து நெருங்கி பழக ஆரம்பித்தனர் எனக்கு மருத்துவ பணம் அதிகமாக தேவைப்பட்டதாலும், வட்டி செலுத்த ஏற்பட்ட காலதாமத்தினாலும் எனது தாயாருக்குரிய பைவ் ஸ்டார் பைனான்ஸ்,தூத்துக்குடி கிளையில் அடகு வைக்கப்பட்டிருந்த சொத்தை அவர்களே பணம் செலுத்தி மீட்டும், எனது தாயார் ஆக்ஸிலியாவுக்கு அவரது புனைப்பெயரான அக்குமா' என்ற பெயரில் வாங்கிய சொத்தை அடைமானம் பெற்றுப் கொண்டு நகைகளை திருப்பி தருவதாக உறுதிபட் தெரிவித்தனர். 

நானும், எனது தாயாரும் அதை ஏற்றுக் கொண்டதில் எனது தாயார் பெயர் 'அக்குமா' என்று ஆவணத்தில் இருப்பதால் அதுவகைக்கு ஆவண மாற்ற பெற்றுக் கொண்டு கூட்டாக கணக்கு தொடங்கி SBI நகைகுரிய

 -3-ஆவண மாற்றம் செய்ய வேண்டுமென கூறி ரூ.2,50,000/-ம் எனது தாயாரிடம் பெற்றுக் கொண்டு, எனது தாயாரின் வங்கிக் கணக்கு, எனது தந்தையுடன் கூட்டாக யூனியன் வங்கி, தூத்துக்குடி கிளையில் இருப்பதால் தனியே சுணக்கு தொடங்க வேண்டுமென்று ஜீவா, மகேஷ் இருவரும் எனது தாயாரை தூத்துக்குடி, பீச் ரோட்டில் அமைந்துள்ள சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா மற்றும் கனரா வங்கியில் எனது தாயாரின் பெயரில் தனியே வங்கிக் கணக்கு தொடங்கி சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவில் மொத்த அடமானத் தொகை ரூ.45,00,000/-த்தில் ரூ.25,00,000/-த்தை எனது தாயாருக்கு 04-01-2024ல் பணமாற்றம் செய்து அதிலிருந்து எனது தாயார் ரொக்கமாக பணம் எடுத்து கொடுத்தால் நகையை திருப்பி கொடுத்து விடுவதாக ஜீவாவும், மகேஷ்-ம் எனது தாயாரை சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா வங்கிக்கு அழைத்துச் சென்று செல்லானை நிரப்பியுள்ளார்கள். 

ஆனால் வங்கியில் பெரிய தொகையை காசோலை மூலம் மட்டுமே பரிவர்த்தனை செய்ய முடியும் என்று தெரிவித்ததால் ரூ.50,000/-த்தை மட்டும் எனது தாயார் பெயரில் நிரப்பி ரொக்கமாக எடுத்துக் கொண்டு,மீதமுள்ள நகைகளை ஜீவாவும், மகேஷ்ம் தூத்துக்குடி போர்ட்சிட்டி கிளையில் எனது நகைகளை அடகு வைத்திருப்பதாக கூறி எனது தாயாருக்குரிய 050891 எண்ணிட்ட காசோலையை ஜீவா மற்றும் மகேஷ் நிரப்பி போர்ட் சிட்டிக்கு ரூ.24,50,000/-த்தை பணமாற்றம் செய்தார்கள். மீத அடமான தொகையான ரூ.5,00,000/-ம் பணத்தை என்னுடைய பெயருக்கு அடமான பத்திரம் போட்டு என்னுடைய வங்கி கணக்கிற்கு அனுப்பினார். 

அதன்பின்பு ரூ.20,00,000/- த்திற்கு என்னுடைய தாயார் பெயரில் உள்ள பத்திரத்தை அடமான பத்திரம் போட்டு ஷ ரூ 20,00,000/-ம் பணமானது நான் ஜீவா என்பவரிடம் இருந்து வாங்கியிருந்தேன். 

அதனால் ஷை ரூ 20,00,000/-ம் பணத்தை நான் ஜீவா என்பவரிடம் திருப்பி கொடுத்து விட்டேன். இதனால் ஷை ரூ.50,00,000/-15 நகை விவர அடகு ரசீது 255 30 31 4-த் திற்கு பத்திரம் அடமானம் வைத்ததில் ரூ 24,50,000/-ம் பணத்தை மோசடி செய்து விட்டார்கள். 

இதனால் அவர்கள் மீதிருந்த நம்பிக்கை அற்று எனக்குரிய மற்றும் எனது உறவினர்களுக்குரிய நகைகளை திருப்பி கேட்டும், மீதப் பணத்தை திருப்பி தருவதாகவும் நான் கேட்டுக் கொண்டதில் சாக்குபோக்குகள் சொல்லி நாட்கடத்தி வந்ததால், கடந்த 23-10-2024 அன்று மதியம் சுமார் 12.00 மணியளவில் ஜீவா என்பவரது வீட்டிற்கு நானும், எனது தாயாரும் சென்றபோது, அங்கிருந்த ஜீவா மற்றும் அவரது கணவர் மெசிங்டன் மற்றும் மகேஷ் ஆகிய மூவரும் சேர்ந்து என்னைப் பார்த்து அசிங்கமான வார்த்தைகளில் திட்டி உனக்கு நகையும், சொத்தும் தர முடியாது. நீ எங்க வேண்டுமானாலும் போய் சொல்லு, உன்னால ஒன்றும் செய்ய முடியாது . நகையை மீண்டும் கேட்டு வரகூடாது என்று அப்படி வந்தால் ஜீவாவின் கணவர் மெசிங்டன், "ஒழுங்கா ஓடிடு, இல்லையென்றால் நாங்க மூனு பேரும் சேர்ந்து உன்னை கொன்னு புதைச்சிடுவோம்" எனவும் கொலை மிரட்டல் விடுத்தனர். இதனால் உயிருக்கு பயந்து நான் அங்கிருந்து எனது வீட்டிற்கு வந்து அச்சத்துடன் இருந்து வருகிறேன்.

எனவே  எனது பெயரில் அடகு வைக்கப்பட்ட எனக்குரிய மற்றும் எனது உறவினர்களுக்குரிய நகைகள் மற்றும் சொத்தினை திருப்பி தராமல் மோசடி செய்து ஏமாற்ற வேண்டுமென்ற நோக்கத்தில் செயல்பட்டு வருவதோடு மட்டுமல்லாமல், என்னை கெட்ட வார்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்த ஜீவா, ஜீவாவின் கணவர் மெசிங்டன் மற்றும் மகேஷ் ஆகிய மூவர் மீதும் தக்க நடவடிக்கை எடுக்குமாறு புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.