ஒட்டப்பிடாரம் குலசேகரநல்லூரில் மாபெரும் மின்னொளி கபாடி போட்டி - யூனியன் சேர்மன் ரமேஷ் தொடங்கி வைத்தார்.
ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் குலசேகரநல்லூர் ஊராட்சி செவல்குளம் கிராமத்தில் ஸ்ரீ கன்னி குலதெய்வம் ராமு கோவில் கொடை விழாவை முன்னிட்டு ராமு நண்பர்கள், சேவல் ஃபைட்டர்ஸ் மற்றும் காளியம்மன் ஃபிரண்ட்ஸ் கிளப் இணைந்து நடத்திய மாபெரும் மின்னொளி கபாடி போட்டியில் அரையிறுதி போட்டியை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஒட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ் தொடங்கி வைத்தார்.
இறுதி போட்டியில் வெற்றி பெற்ற பூசனூர் அணிக்கு பரிசுத்தொகை 12000/- மற்றும் வெற்றி பெரும் அணிக்கு வெற்றி கோப்பையையும் யூனியன் சேர்மன் ரமேஷ் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு துணை அமைப்பாளர் மாடசாமி ஒன்றிய கவுன்சிலர் மொட்டையசாமி ஒன்றிய பொறியாளர் அணி மணிகண்டன் ஒன்றிய தொண்டரணி அமைப்பாளர் கோபால் ஓசநூத்து கருப்பசாமிபுதுப்பச்சேரி குணசேகரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.