ஓட்டப்பிடாரத்தில் இலவச திருமணம் செய்து வைப்பதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட இந்து சமய அறங்காவல்துறை ஆய்வர் முப்பிடாதி இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணி ஆகியோர் மீது ஒட்டப்பிடாரம் காவல் நிலையத்தில் புகார் மனு.
ஓட்டப்பிடாரத்தில் இலவச திருமணம் செய்து வைப்பதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட இந்து சமய அறங்காவல்துறை ஆய்வர் முப்புடாதி மீது ஒட்டப்பிடாரம் காவல் நிலையத்தில் முருகன் புகார் மனு அளித்துள்ளார்.
முருகன் த/க .பெ.மாரியப்பன்.9/30 தெற்கு பரும்பூர்.ஓட்டப்பிடாரம் 628401. ஓட்டப்பிடாரம் தாலுகா, தாத்துக்குடி மாவட்டம்.அவர் மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது:
என்னுடைய மகள் M.முனிஸ்வரிக்கு தமிழக அரசின் இலவச திருமணத்திட்டத்தின் கீழ் திருமண உதவி தொகை மற்றும் இலவச இதர பொருட்கள் வாங்கித்தருவதாக கூறி என்னிடம் தனிப்பட்ட முறையில் பணம் கொடுத்தால் தான் இலவச திருமண உத்திரவு பெற்று தரப்படும் என்று கூறி என்னிடம் ரொக்கமாக ரூ.10,000 (பத்தாயிரம் பெற்றுக் கொண்டு மோசடி செய்து எனது மகளுக்கு இலவச திருமணத்திட்டத்தின் கீழ் பெற்றுத்தராமால் என்னுடைய பணத்தையும் திருப்பி தராமல் மோசடி செய்த ஒட்டப்பிடாரம் இந்து சமய அறக்காவல்துறை ஆய்வர் முப்பிடாதி மற்றும் இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் அன்புமணி அவர்களிடம் விசாரணை செய்து நடவடிக்கை எடுத்து எனது பணத்தை மீட்டு தரவேண்டும்.
நான் மேலே கண்ட முகவரியில் எனது குடும்பத்துடன் குடியிருந்து வருகிறேன். நான் பழைய இரும்பு பாட்டில் வியாபாரம் செய்து எனது குடும்பத்தை நடத்தி வருகின்றேன். எனது மகள் M.முனீஸ்வரிக்கும், ஓட்டப்பிடாரம் தாலுகா, சந்தரகிரியை சேர்ந்த P.விஸ்வா என்ற நபருக்கும் இரு வீட்டாரும் பேசி திருமண ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிலையில் தமிழக அரசின் இந்து சமய அறநிலைத்துறையின் இலவச திருமணத்திட்டதை கேள்விப்பட்டு ஒட்டப்பிடாரம் அறங்காவல்துறை ஆய்வர் முப்பிடாதி அவர்களை கடந்த 20 நாட்களுக்கு முன்பு ஓட்டப்பிடாரம் அருள்மிகு.விஸ்வநாத சுவாமி (சிவன் கோவில்) நேரில் சென்று சந்தித்து விவரம் கேட்டேன் அதன் பின்பு அவர்கள் கூறியப்படி எனது மகள் M.முனீஸ்வரி மற்றும் மணமகன் P.விஸ்வா ஆகியோரின் இருப்பிட சான்று, வருமானச்சான்று, முதல் திருமணச்சான்று, ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், கல்வி சான்று ஆகிய அனைத்தையும் ஓட்டப்பிடாரம் ஆய்வர் முப்பிடாதி அவர்களிடம் சமர்ப்பித்தேன்.
அவர்கள் கூறியப்படியே 27.11.2024 அன்று திருமண தேதி குறிக்கப்பட்டு பத்திரிக்கையும் அடித்து அதில் ஒரு பிரதியை ஆய்வரிடம் கொடுக்கப்பட்டது. அடித்த பத்திரிக்கையை மணமகன் மற்றும் மகள் வீட்டாரிடம் கொடுக்கப்பட்டது.
இந்நிலையில் 25.11.2024 திங்கள் கிழமை காலையில் ஒட்டப்பிடாரம் ஆய்வர் முப்பிடாதி என்னைத் தொடர்பு கொண்டு அறங்காவல் துறை இணை ஆணையர் அன்புமணி அவர்களுக்கு இலவச திருமண உத்திரவு பிறப்பிப்பதற்கு கட்டணமாக ரூ.10,000 (ரூபாய் பத்தாயிரம்) கொடுக்க வேண்டும் என்று கேட்கிறார். நீங்கள் என்னிடம் ரொக்கமாக கொடுத்து விடுங்கள் அதற்கு நான் பொறுப்பு என்று கூறினார். நானும் அதனை நம்பி திங்கள் அன்று நான் சிவன் கோவிலுக்கு நேரில் சென்று ஆய்வர் முப்பிடாதியிடம் ரூ.10,000 (ரூபாய் பத்தாயிரம்)த்தை ரொக்கமாக கொடுத்தேன்.கல்யாண வேலை பாருங்கள் நான் அன்புமணி ஐயா விடம் கொடுத்து விட்டு உங்களுக்குகான 60,000 மதிப்புள்ள இலவச திருமண பொருட்கள் வாங்கி தரவேண்டியது எனது பொறுப்பு என்று கூறினார். மறுடியும் 20112024 செவ்வாய்கிழமை அன்று என்னை மீண்டும் தொடர்பு கொண்டு இணை ஆணையர் அன்புமணி ஐயாவுக்கு கொடுக்கவேண்டிய பணத்தை கொடுத்து விட்டேன் என்றும் எனக்கு தனிப்பட்ட முறையில் எனது சொந்த செலவிற்கு 5,000 வேண்டும் என்று முப்பிடாதி அவர்கள் என்னிடம் கேட்டார்கள். நான் எனது குடும்ப கழ்நிலையையும் எனது வருமை சூழ்நிலையையும் எடுத்துக் கூறியும் அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. நீங்கள் இந்த பணத்தை கொடுக்காவிட்டால் சான்று சரியில்லை என்று காரணம் காட்டி இலவச திருமணத்தை ரத்து செய்து விடுவேன் என்று கூறினார்கள்.
27.11.2024 புதன்கிழமை அன்று திருமண பெண் வீட்டாரும் மாப்பிளை வீட்டாரும் மணபெண் மற்றும் மணமகனுடன் சிவன் கோவிலுக்கு சென்ற போது இன்று இலவச திருமணம் இல்லை என்ற தகவல் எங்களுக்கு தெரிவிக்கப்பட்டது. ஆய்வர் முப்பீடாதி அவர்களை தொடர்பு கொண்டு கேட்டபோது ஓசிக்கு வேலை செய்வதற்கு நான் ஆள்இல்லை. இணை ஆணையர் அன்புமணிக்கு என்மூலமாக கேட்ட பணத்தை நீங்கள் உடனடியாக கொடுப்பீர்கள்.
எனக்கு தனிப்பட்ட முறையில் கொடுக்க வேண்டிய பணத்தை நீங்கள் தரவில்லை நான் உனக்கு ஓசிக்கு வேலை செய்யனுமா என்று என்னிடம் கூறினார்கள். வேறு வழியில்லாமல் ஊர் பெரியோர்கள் முன்னிலையில் சிவன் கோவிலில் வைத்து தாலி கட்டி திருமணத்தை முடித்து வைத்தோம். என்னை ஏமாற்றி என்னிடம் 10,000 பணத்தை பெற்றுக்கொண்டு இலவச திருமணத்தை ரத்து செய்து கொடுத்த பணத்தையும் திருப்பி தராமல் தற்போது என்னை ஏமாற்றி 10,000 மோசடி கொடுத்த பணத்தையும் திருப்பி தர தற்போது மறுக்கிறார் ஆய்வர் முப்பிடாதி அன்புமணி மற்றும் முப்பிடாதி அவர்களை நேரில் சந்தித்து பணத்தை கேட்டதற்கு உன்னால் முடிந்ததை செய்துக்கொள் எங்களது அதிகாரத்தை பற்றி உனக்கு தெரியாது என என்று மிரட்டும் தோணியில் பேசிகின்றனர்.
எனவே இந்த விசயத்தில் தீர விசாரணை செய்து என்னிடம் மோசடி செய்த இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணி மற்றும் முப்பிடாதி ஆகியோரிடம் நேரில் விசாரணை செய்து தக்க நடவடிக்கை எடுத்து எனது பணத்தை மீட்டுத்தரும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.
முருகன் த/க .பெ.மாரியப்பன்.9/30 தெற்கு பரும்பூர்.ஓட்டப்பிடாரம் 628401. ஓட்டப்பிடாரம் தாலுகா, தாத்துக்குடி மாவட்டம்.
எதிர்மனுதாரர் விலாசம் :ஓட்டப்பிடாரம் ஆய்வர் முப்பிடாதி.
8754787059
அன்புமணி
:9443486037