தூத்துக்குடி மாவட்டத்தில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற சுமார் 2000 யிரத்திற்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்களுக்கு கனிமொழி எம்பி சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்டத்தில்  முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற சுமார் 2000 யிரத்திற்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்களுக்கு கனிமொழி எம்பி சான்றிதழ் மற்றும் பதக்கங்கள்  வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் 2023 ம் ஆண்டுக்கான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் அண்மையில் தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்றது இதில் தடகளம் கால்பந்து கைப்பந்து கூடைப்பந்து கபடி ஹாக்கி நீச்சல் உள்ளிட்ட பல்வேறு விதமான போட்டிகள் நடைபெற்றன பள்ளி மாணவ மாணவிக்கான போட்டிகள் கல்லூரி மாணவ மாணவியர்கள் காண போட்டிகள் மாற்றுத்திறனாளி மாணவ மாணவியருக்கு போட்டிகள் அரசு ஊழியர்களுக்கான போட்டிகள் பொதுமக்களுக்கான போட்டிகள் என பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. 

இதில் முதல் மூன்று இடங்களை பிடித்தது வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுத்தொகைகள் அனைத்தும் வங்கிக் கணக்குகளில் அனுப்பப்பட்டன இதைத்தொடர்ந்து வெற்றி பெற்ற போட்டியாளர்களுக்கான சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கும் நிகழ்ச்சி தூத்துக்குடியில் உள்ள தருவை மைதான மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பாராளுமன்ற திமுக குழு துணை தலைவரும் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி எம்பி மீன்வளம் மீனவர்நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகளுக்கு சான்றிதழ்களையும் பரிசுகளையும் வழங்கினார்கள்.

இதைத் தொடர்ந்து பேசிய கனிமொழி எம்பி பல்வேறு தடைகளை தாண்டி தான் மாணவ மாணவிகள் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ள வருகிறார்கள் அவர்களை மேலும் ஊக்கப்படுத்தும் வகையில் தமிழக அரசு இதுபோன்ற பல்வேறு விளையாட்டுப் போட்டிகளை நடத்தி வருகிறது இதுபோல் தூத்துக்குடி மாவட்டத்திலும் ஹாக்கி சைக்கிளிங் உள்ளிட்ட போட்டிகளில் தேசிய அளவிலான மற்றும் ஆசிய அளவிலான போட்டிகளில் பங்கு பெற்று மாணவ மாணவியர் சாதனை படைத்து வருகிறார் இதுபோல் ஏராளமானோர் சாதனை படைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார் மேலும் 20 ஆண்டுகளாக விளையாட்டு பயிற்சியாளர்கள் நியமிக்கப்படாமல் இருந்தது திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு தான் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் விளையாட்டு பயிற்சியாளர்கள் தமிழக முழுவதும் 90 பேர் நியமனம் செய்யப்பட்டனர் அதுமட்டுமின்றி விளையாட்டு துறைக்கு என முன்னுரிமை அளித்து பல்வேறு மேம்பாட்டு பணிகள் விளையாட்டு துறையில் நடைபெற்று வருகிறது இதை பயன்படுத்திக் கொண்டு விளையாட்டு வீரர்கள் முன்னேற்ற பாதையில் செல்ல வேண்டும் என கேட்டுக்கொண்டார் மேலும் தூத்துக்குடியில் உள்ள விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் வகையில் மாநகராட்சி சார்பில் இறகு பந்து மற்றும் உடற்பயிற்சி செய்வதற்கான உள் விளையாட்டரங்கம் நான்கு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளது இந்த அரங்கங்கள் விரைவில் துவங்கப்பட உள்ளது எனவும் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் முன்னதாக பள்ளி மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் அதுமட்டுமின்றி மல்லர் கம்பம் வீர விளையாட்டு நிகழ்ச்சியும் நடைபெற்றது இதில் கலந்துகொண்ட மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிகாட்டி பார்வையாளர்களை கவர்ந்தனர் அவர்களுக்கு பரிசுகளும் ரொக்க பரிசும் கனிமொழி எம்பி வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி சட்டமன்ற உறுப்பினர்கள் சண்முகையா, மார்கண்டையன்,மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர் பிரம்மசக்தி, மாநகர தலைவர் ஆனந்த சேகரன் மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன்,கூடுதல் ஆட்சியர் தாக்கரே சுபம் ஞானதேவராவ்,உதவிஆட்சியர் கௌரவ் குமார்,உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.