தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் முகாமில் மேயர் ஜெகன் பெரியசாமி பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.

தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் முகாமில் மேயர் ஜெகன் பெரியசாமி பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.

தூத்துக்குடி மாநகராட்சி 60 வார்டுகளிலும் சாலை, குடிநீர், கால்வாய், பூங்கா மற்றும் சுகாதார கட்டமைப்பு வசதிகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. மேலும் பகுதி சபா கூட்டங்களும் உரிய காலங்களில் நடத்தப்பட்டு பொதுமக்களிடமிருந்து வரப்பெறும் கோரிக்கைகள் அனைத்தும் முறையாக பரிசீலிக்கப்பட்டு முன்னுரிமை அடிப்படையில் பணிகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில், 03.07.24 இன்று புதன்கிழமை மாநகராட்சி வடக்கு மண்டல அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில், ஆணையர் மதுபாலன் முன்னிலையில் நடைபெற்றது. இதில் 1 முதல் 15 மற்றும் 20 வது வார்டுகளில் வசிக்கும் பொதுமக்கள் தங்களது சொத்து வரி நிர்ணயம், சொத்துவரி பெயர் மாற்றம், திருத்தங்கள், புதிய குடிநீர் இணைப்பு, தண்ணீர் கட்டண பெயர் மாற்றம், தண்ணீர் உபயோக கட்டண விகிதங்கள் மாற்றம், கட்டிட அனுமதி, ஆக்கிரமிப்புகள் அகற்றுதல், பொதுச் சுகாதாரம், உரிமை ஆணை கட்டணங்கள், தொழில்வரி, பாதாள சாக்கடை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களை மேயர் ஜெகன் பெரியசாமியிடம் அளித்தனர். 

பின்னர் மேயர் ஜெகன் பெரியசாமி கூறுகையில் இம் முகாமில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் அனைத்தும் முறையாக பரிசீலிக்கப்பட்டு முன்னுரிமை அடிப்படையில் விரைந்து தீர்வு காணப்படும், மேலும் பொதுமக்களின் நலன் கருதி அத்தியாவசிய குடிநீர் தேவைகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் வகையில் மாநகராட்சிக்குட்பட்ட குடியிருப்பு பகுதிகளில் உடனடியாக தீர்வை இல்லாத நபர்களுக்கு மாநகராட்சி மூலம் தற்காலிக தீர்வை வழங்கப்பட்டு ஆயிரம் குடிநீர் இணைப்புகள் வழங்கப்படும் என மேயர் தெரிவித்தார்.

இம்முகாமில் மாநகராட்சி துணை மேயர் ஜெனிட்டா , துணை ஆணையர் ராஜாராம், வடக்கு மண்டல தலைவரும் திரேஸ்புரம் பகுதி திமுக செயலாளருமான நிர்மல் ராஜ், செயற்பொறியாளர் பாஸ்கர், மண்டல துணை ஆணையர் நரசிம்மன், மாநகர அமைப்பு அலுவலர் ரங்கநாதன், மாநகர துணை பொறியாளர் சரவணன், மாநகர் நல அலுவலர் மருத்துவர் தினேஷ், மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் காந்தி மணி, சுப்புலட்சுமி, ரெங்கசாமி, நாகேஸ்வரி, அந்தோணி மார்ஸ்லின், ஜெயசீலி, தெய்வேந்திரன் ஜாக்குலின் ஜெயா, திமுக மாநகர துணை செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான கீதா முருகேசன், இந்திரா நகர் பகுதி திமுக செயலாளர் சிவக்குமார் மற்றும் ஏராளமான பொதுமக்கள், திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.