ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அக்காநாயக்கன்பட்டி கிராமத்தில் புதுக்குளத்தின் கரையை பலப்படுத்தி தடுப்பணை அமைக்கும் பணிகளை ஒட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அக்காநாயக்கன்பட்டி கிராமத்தில் புதுக்குளத்தின் கரையை பலப்படுத்தி தடுப்பணை அமைக்கும் பணிகளை  ஒட்டப்பிடாரம் யூனியன் சேர்மன்  ரமேஷ் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அக்காநாயக்கன்பட்டி கிராமத்தில் புதுக்குளத்தின் கரையை பலப்படுத்தி தடுப்பணை கடந்த ஆண்டு பெய்த கனமழையில் புதுக்குளம் நிரம்பி குளத்தின் கரை முற்றிலுமாக உடைந்து சுற்றியுள்ள கிராமங்களில் மழை நீர் புகுந்து அதிகமான பாதிப்புகளை உண்டாக்கியது. 

இதனையடுத்து குளத்தின் கரையை சீரமைத்து தர வேண்டும் என்று ஊர் பொதுமக்கள் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையாவிடம் கோரிக்கை வைத்திருந்தனர்.

சட்டமன்ற உறுப்பினர் மேற்கொண்ட துரித நடவடிக்கையின் மூலம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் 40 லட்சம் மதிப்பீட்டில் புதுக்குளத்தின் கரையை பலப்படுத்தி தடுப்பணை அமைக்கும் பணிகளை ஒட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் கிரி உதவி பொறியாளர் பால நமச்சிவாயம் பணி மேற்பார்வையாளர் சங்கர் வருவாய் ஆய்வாளர் ராஜேஷ் கிராம நிர்வாக அலுவலர் நாராயணன் ஊராட்சி மன்ற தலைவர்கள் அய்யாதுரை அருண்குமார் மாடசாமிதுணைத் தலைவர் மகாலட்சுமிஒன்றிய மகளிர் அணி துணை அமைப்பாளர் ராமலட்சுமிமகளிரணி நித்யாஇளைஞரணி மகேஷ் சந்தனகுமார்மற்றும் ஊர் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.