ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றியம் ஜம்புலிங்கபுரத்தில் திமுக அரசின் நான்கு ஆண்டுகள் சாதனை விளக்க பொதுக்கூட்டம் - ஒன்றிய செயலாளர் இளையராஜா தலைமையில் நடைபெற்றது.

ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றியம் ஜம்புலிங்கபுரத்தில் திமுக அரசின் நான்கு ஆண்டுகள் சாதனை விளக்க பொதுக்கூட்டம் - ஒன்றிய செயலாளர் இளையராஜா தலைமையில் நடைபெற்றது.

தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு க.ஸ்டாலின் ஆணைப்படி தமிழ்நாடு துணை முதலமைச்சரும் திமுக இளைஞரணி செயளாருமான உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும் திமுக துணை பொதுச் செயலாளருமான கனிமொழி கருணாநிதி மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பரமரிப்புத்துறை அமைச்சரும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அனிதா ஆர் ராதாகிருஷ்ணன் ஆகியோரது வழிகாட்டுதலின்படி ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றியம் ஜம்புலிங்கபுரத்தில் திமுக அரசின் நான்கு ஆண்டுகள் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.

"நாடு போற்றும் நான்காண்டு தொடரட்டும் பல்லாண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்"ஒட்டப்பிடாரம் திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் இளையராஜா தலைமையில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா தலைமை கழக பேச்சாளர் ரகுமான்ஆகியோர் கலந்து கொண்டு திராவிட மாடல் அரசின் சாதனைகளை பொது மக்களிடம் எடுத்து கூறினர்.

பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட பொது மக்களுக்கு ஒட்டப்பிடாரம் திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் இளையராஜா நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் ஒட்டப்பிடாரம் திமுக வடக்கு ஒன்றிய சார்ந்த நிர்வாகிகள் பொது மக்கள் என பெரும் திரளான கலந்து கொண்டனர்.