IND vs SL: ‘அடேங்கப்பா’…எம்முட்டு வேகம்..உம்ரான் மாலிக் மெகா சாதனை: இந்திய அணி எளிய வெற்றி!
இந்தியா வந்துள்ள இலங்கை அணி முதலில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி 1-2 என்ற கணக்கில் தொடரை இழந்தது.
இந்திய இன்னிங்ஸ்:
கௌகாதி பிட்சில் பேட்டர்களால் ரன்களை குவிக்க முடியும், பௌலர்களால் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்த முடியாது என பிட்ச் ரிப்போர்ட் கூறியிருந்தது. இதேபோல்தான், நடந்தது.
ஓபர்கள் ரோஹித் ஷர்மா, ஷுப்மன் கில் இருவரும் பவர் பிளேவில் தொடர்ந்து அபாரமாக விளையாடி ரன்களை குவித்தனர்.. இதனால், பவர் பிளேவில் இந்திய அணி 75/10 ரன்களை குவித்து அசத்தியது.
இதனைத் தொடர்ந்து ரோஹித் ஷர்மா, ஷுப்மன் கில் இருவரும் அரை சதம் கடந்து அசத்தினார்கள். இந்நிலையில், கில் 70 (60) ரன்கள் சேர்த்த நிலையில், ஷனகா பந்துவீச்சில் LBW ஆகி நடையைக் கட்டினார். இவர் 11 பவுண்டரிகளை அடித்திருந்தார்.
தொடர்ந்து ரோஹித் ஷர்மா அபாரமாக விளையாடி வந்த நிலையில் 67 பந்துகளில் 9 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் உட்பட 83 ரன்களை எடுத்து, இடது கை வேகப்பந்து வீச்சாளர் மதுஷங்கா பந்துவீச்சில் போல்ட் ஆனார்.
கோலியும் வரலாற்று சாதனை:
இதனைத் தொடர்ந்து விராட் கோலியுடன் இணைந்த ஷ்ரேயஷ் ஐயர் 28 (24), கே.எல்.ராகுல் 39 (29), ஹார்திக் பாண்டியா 14 (12), அக்சர் படேல் 9 (9) ஆகியோர் பெரிய ஸ்கோர் அடிக்காமல் ஆட்டமிழந்தனர்.
இருப்பினும், மறுமுனையில் விராட் கோலி மிரட்டலாக விளையாடி, ஒருநாள் கிரிக்கெட்டில் 45ஆவது சதத்தை பூர்த்தி செய்தார். இதனைத் தொடர்ந்து 48.2ஆவது ஓவரில் ரஜிதா பந்தில் கோலி 87 பந்துகளில் 12 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உட்பட 113 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுமியில் ஷமி 4 (4), சிராஜ் 7 (8) ஆகியோர் களத்தில் இருந்தார்கள். இந்தியா 373/7 ரன்களை குவித்தது.
இலங்கை இன்னிங்ஸ்:
மெகா இலக்கை துரத்திக் களமிறங்கிய இலங்கை அணியில் ஓபனர் பதும் நிஷங்கா 72 (80) சிறப்பாக விளையாடி அசத்தினார். இருப்பினும், அவிக்ஷா பெர்ணான்டோ 5 (12), குஷல் மெண்டிஸ் 0 (4), அசலங்கா 23 (28) போன்றவர்கள் படுமோசமாக சொதப்பி ஆட்டமிழந்தனர்.
ஷனகா அபார சதம்:
தொடர்ந்து தனஞ்ஜெயா டி சில்வா 47 (40) அதிரடியாக விளையாடி நடையைக் கட்டிய நிலையில், இறுதிக் கட்டத்தில் தஷுன் ஷனகா போராடி 88 பந்துகளில் 12 பவுண்டரி,ஒரு சிக்ஸர் உட்பட 108* ரன்களை எடுத்தார். இருப்பினும் இது வெற்றிக்கு போதுமானதாக அமையவில்லை. இலங்கை அணி 50 ஓவர்களில் 306/8 ரன்களை சேர்த்து, 67 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.
உம்ரான் மாலிக் சாதனை:
இப்போட்டியில் உம்ரான் மாலிக் 156 வேகத்தில் பந்துவீசி, இந்திய அணிக்காக ஒருநாள் கிரிக்கெட்டில், அதிவேகமாக பந்துவீசிய 2ஆவது பௌலர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். ஜவகல் ஸ்ரீநாத் (157) முதலிடத்தில் உள்ளார். இர்பான் பதான் (153.7) மூன்றாவது இடத்தில் இருக்கிறார்.