தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி ஊராட்சி மாதாநகர் MST கபாடி குழு நடத்திய சூரியஒளி கபாடி போட்டி - சண்முகையா எம்எல்ஏ துவக்கி வைத்தார்.

தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி ஊராட்சி மாதாநகர் MST கபாடி குழு நடத்திய சூரியஒளி கபாடி போட்டி - சண்முகையா எம்எல்ஏ துவக்கி வைத்தார்.

தூத்துக்குடி கிழக்கு ஒன்றியம் மாப்பிள்ளையூரணி ஊராட்சி மாதாநகர் MST கபாடி குழு நடத்திய சூரியஒளி கபாடி போட்டியின் அரை இறுதி போட்டியை சிறப்பு அழைப்பாளராக ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா கலந்து கொண்டு   துவக்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து நடந்து முடிந்த பொதுத் தேர்வில் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்புகளில் முதலாவது இரண்டாவது மதிப்பெண் பெற்ற பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.

இந்தநிகழ்ச்சியில் தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் சரவணகுமார் தூத்துக்குடி மத்திய ஒன்றிய செயலாளர் ஜெயக்கொடி மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் பொன் பாண்டிய( எ) ரவி ஒன்றிய கவுன்சிலர் அந்தோணி தனுஷ் பாலன் ஒன்றிய துணை செயலாளர் SR. கணேசன் வார்டு உறுப்பினர்கள் ஜேசுராஜ் வசந்தகுமாரி கபாடி கந்தன் ராஜேந்திரன் ராமச்சந்திரன் மற்றும் விழா கமிட்டியினர் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.