தூத்துக்குடி முத்து நகர் கடற்கரை பூங்காவில் உடற்பயிற்சி உபகரணங்கள் பழுது - சரி செய்து தர மேயர் ஜெகன் பெரியசாமியிடம் இந்து முன்னணி ராகவேந்திரா கோரிக்கை..

தூத்துக்குடி முத்து நகர் கடற்கரை பூங்காவில் உடற்பயிற்சி உபகரணங்கள் பழுது - சரி செய்து தர மேயர் ஜெகன் பெரியசாமியிடம் இந்து முன்னணி ராகவேந்திரா கோரிக்கை..

தூத்துக்குடி முத்து நகர் கடற்கரை பூங்காவில் தினத்தோறும் காலை மாலை என இரு வேலைகளிலும் நூற்றுக்கணக்கான ஆண்கள் மற்றும் பெண்கள் நடை மேற்கொள்கின்றனர்.

.நடைபயிற்சி முடித்துவிட்டு உடற்பயிற்சி செய்வதற்காக மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டிருக்கும் உடல் பயிற்சி  உபகரணங்கள் பயன் படுத்த செல்லும் போது அதில் சில உபகரணங்கள் பழுதடைந்து பயனற்று காணப்படுகிறது.

எனவே உபகரணங்களில் ஏற்பட்டிருக்கும் பழுதினை மாநகராட்சி நிர்வாகம் சரி செய்து மீண்டும் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் சரி செய்து கொடுத்திட தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமிக்கு இந்து முன்னணி தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ராகவேந்திரா கோரிக்கை விடுத்துள்ளார்.