தூத்துக்குடியில் பரவி வரும் டெங்கு காய்ச்சலை போர்க்கால அடிப்படையில் கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை அதிமுக மாமன்ற கொறடா மந்திரமூர்த்தி வலியுறுத்தி பேச்சு.
தூத்துக்குடி மாநகராட்சி சாதாரண மற்றும் அவசரக் கூட்டம் இன்று மாநகராட்சி கூட்ட அரங்கில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் ஆணையர் தினேஷ்குமார் முன்னிலையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் அதிமுக 51 வது வார்டு மாமன்ற உறுப்பினரும் ,மாநகராட்சி அதிமுக எதிர் கட்சி கொறடாவுமான மந்திரமூர்த்தி தூத்துக்குடி மாநகராட்சி பள்ளியில் பயிலும் மாணவ,மாணவிகளின் வாசிப்பு திறனை ஊக்குவிக்கும் வகையில் ஒரு குறிப்பிட்ட கட்சி சார்புடைய நாளிதழை மட்டும் வாங்குவதற்கு முடிவு செய்துள்ளதை கண்டித்தும் பாரபட்சம் இல்லாமல் அனைத்து முன்னணி தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ்களையும் மாநகராட்சி பள்ளி மாணவ,மாணவிகளுக்கு வாங்கி வழங்க வேண்டும் எனவும்.
தூத்துக்குடி நகரில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் இதனை கட்டுப்படுத்த மாநகராட்சி சார்பில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்க்கொள்ள வேண்டும் எனவும்,
தூத்துக்குடி நகரில் நிலவிவரும் ஆவின் பால் தட்டுப்பாட்டை போக்குவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் மாமன்ற கூட்டத்தில் வலியுறுத்தி பேசினார்.