தூத்துக்குடி நெல்லை பயணிகள் ரயில் சேவை மீண்டும் இயக்கம் - வரவேற்று வழி அனுப்பி வைத்த சண்முகையா எம்எல்ஏ.

தூத்துக்குடி நெல்லை பயணிகள் ரயில் சேவை மீண்டும் இயக்கம் - வரவேற்று வழி அனுப்பி வைத்த சண்முகையா எம்எல்ஏ.

ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையத்தில் திருநெல்வேலி - தூத்துக்குடி பயணிகள் ரயில் கடந்த மாதம் 19-08-2024 ரத்து செய்வதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்தது. 

இதனைத் தொடர்ந்து ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதியிடம் சென்னை கோட்ட உதவி மேலாளரிடமும் மதுரையில் மண்டல மேலாளரிடமும் ரத்து செய்யப்பட்ட தூத்துக்குடி - திருநெல்வேலி பயணிகள் ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் இயக்கப்பட வில்லை என்றால் மக்களை திரட்டி மாபெரும் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று மணு அளித்ததை தொடர்ந்து ரயில்வே நிர்வாகம் மீண்டும் தூத்துக்குடி - திருநெல்வேலி பயணிகள் ரயிலை மீண்டும் இயக்குவதாக அறிவித்தது.

அதனைத் தொடர்ந்து இன்றைய தினம் வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையத்தில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா ஒட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ் ஆகியோர் மீண்டும் இயக்கப்பட்ட பயணிகள் ரயிலை வரவேற்று தூத்துக்குடியை நோக்கி புறப்பட்டு செல்வதற்கு கொடி அசைத்து துவக்கி வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் ஜெயலட்சுமி ஒட்டநத்தம் ஊராட்சி மன்ற தலைவர் சரிதா கண்ணன் மணியாச்சி ஊராட்சி மன்ற தலைவர் பிரேமா கொடியங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் அருண்குமார் அக்கநாயக்கன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் அய்யாத்துரை கலப்பைபட்டி ஊராட்சி மன்ற தலைவர் சண்முகசுந்தரி தங்கராஜ் பாறைக்குட்டம் ஊராட்சி மன்ற தலைவர் மாடசாமி முறம்பன் ஊராட்சி மன்ற தலைவர் தேன்மொழி சுடலைமணி பரிவில்லிக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் பெல்சி துணைத் தலைவர் தங்கபாண்டியன் ஒன்றிய தொண்டர் அணி அமைப்பாளர் கோபால் ஒன்றிய பொறியாளர் அணி மணிகண்டன்bகிளைச் செயலாளர்கள் முருகன் ஆறுமுகராஜா இளங்கோ முருகன்bமற்றும் கழக தொண்டர்கள் பொதுமக்கள் மாணவ மாணவிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.