இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் வாஞ்சிநாதனுக்கு மணிமண்டபம், திருவுருவ சிலை தூத்துக்குடி விமான நிலையத்திற்கு அவர் பெயர் சூட்ட வேண்டும் - இந்து முன்னணி சார்பில் ஆசிரியரிடம் கோரிக்கை மனு.
தூத்துக்குடி இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் வாஞ்சிநாதனுக்கு மணிமண்டபம், திருவுருவ சிலை மற்றும் தூத்துக்குடி விமான நிலையத்திற்கு அவர் பெயர் சூட்ட வேண்டும் என இந்து முன்னணி சார்பாக மாவட்ட செயலாளர் ராகவேந்திரா உள்ளிட்டோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கோரிக்கை மனுவில்;
இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிரான நடவடிக்கையில் வாஞ்சிநாதன் பங்கேற்றார். ஆங்கிலேயர் ஆட்சியம் திருநெல்வேலி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியராக இருத்தவர் ராபர்ட் ஆஷ். இவர் வ.உ.சிதம்பரனார் சுதேசி நவாப் சங்கம் கப்பல் நிறுவனத்தை எதிர்த்து. ஆங்கிலேயர்களுக்கு சாதகமாக செயல்பட்டதால் வாஞ்சிநாதன் அவர்கள் ஆஷின் நடவடிக்கைகளை எதிரித்து வந்தார். 1911-ம் ஆண்டு ஜீன் மாதம் 17ம் தேதி ஆஷ் துரையை திருநெல்வேலியிலிருந்து மணியாச்சியாக்கி வந்த இரயிலில் ஆஷ் துரை இருந்ததை கண்டு நேரில் தன்னுடைய கைதுப்பாக்கியை வைத்து சுட்டு கொன்றார். ஆங்கிலேயரால் தண்டனை பெறக்கூடாது என்று தன்னைத்தானே சுட்டுக் கொண்டவர். இந்திய சுதந்திர போராட்டத்திற்கு பாடுபட்ட வாஞ்சிநாதன் அவர்களின் சிலையை இந்திய சுதந்திர போராட்ட வீரர் என்ற முறையில்.
தூத்துக்குடி மாவட்டம், வாஞ்சிமணியாச்சியில் அவருக்கு மணிமண்டபம் மற்றும் சிலை அமைக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பாக தங்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த கோரிக்கையை காலதாமதப்படுத்தாமல் உடனடியாக சிலை அமைப்பதற்கு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.