தூத்துக்குடி தூ.சவேரியார்புரம்   பாதுகாவலர் புனித சவேரியார் ஆலய திருவிழா  24.11.2021 கொடியேற்றத்துடன் துவங்கியது அருள் தந்தை அந்தோணி ஜெகதீசன் தலைமையில் கொடியேற்றம் நடைபெற்றது.

தூத்துக்குடி  தூ.சவேரியார்புரம்   பாதுகாவலர் புனித சவேரியார் ஆலய திருவிழா  24.11.2021 கொடியேற்றத்துடன் துவங்கியது அருள் தந்தை அந்தோணி ஜெகதீசன்  தலைமையில் கொடியேற்றம் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம் T. சவேரியார்புரம் புனித சவேரியார் ஆலய திருவிழா 24/11/23 முதல் 03/12/23 வரை 10 நாட்கள் நடைபெறும் திருவிழா அருட் தந்தை அந்தோணி ஜெகதீசன் தலைமையில் கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது.

இந்த நிகழ்வில் அருள் தந்தையர்கள் உபர்ட்டஸ், அமலன், சகாயராஜ்,ஜெய்கர், வின்சென்ட், ஜஸ்டின், கிங்ஸ்டன், வினித், அருள் சகோதரிகள்,ஊர்நிர்வாகிகள், ஊர் இறை மக்கள் கலந்து கொண்டனர்.

திருவிழாவானது தெடர்ந்து பத்து நாட்கள் சிறப்பாக நடைபெற உள்ளது தினமும் காலை 6 மணிக்கு திருப்பலியும் மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை  மற்றும் நற்கருணை ஆசீர் தினமும் நடைபெறும் ஏழாம் திருவிழா அன்று பாதுகாவலர் சவேரியாரின் திருஉருவ பவனி நடைபெறும் எட்டாம் திருவிழா அன்று காலை புதுநன்மை திருப்பலியும் ஒன்பதாம் நாள் திருவிழா அன்று மாலை  திவ்ய நற்கருணை ஆசீரும் பத்தாம் திருவிழாவான டிசம்பர் 3 ம் தேதி அன்று காலை பாடல் திருப்பலியும் அதனைத் தொடர்ந்து சப்பர பவனியும் நடைபெறும் இந்த நிகழ்ச்சிகளை பங்குத்தந்தை குழந்தை ராஜன்  அருள் சகோதரிகள் மற்றும் ஊர் நிர்வாகிகள் பங்கு மக்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.