தூத்துக்குடி தெற்கு மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளராக திருச்சிற்றம்பலம் நியமனம் - எஸ்பி சண்முகநாதனிடம் வாழ்த்து பெற்றார்.
தூத்துக்குடி கதிர்வேல் நகர் பாரதி நகர் 5வது தெருவில் வசித்து வருபவர் பி.திருச்சிற்றம்பலம். தூத்துக்குடி 39வது வார்டு அதிமுக செயலாளராக பணியாற்றி வந்தார். பின்னர், மத்திய வடக்கு பகுதி எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளராக பணியாற்றினார். தற்போது தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.பி சண்முகநாதன் பரிந்துரையின் பேரில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளராக திருச்சிற்றம்பலம் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான அறிவிப்பை அதிமுக கழக பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே பழனிச்சாமி நியமனம் செய்து அறிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து திருச்சிற்றம்பலம் அதிமுக தெற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் எஸ்.பி சண்முகநாதனை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றார்.
அம்மா பேரவை இணை செயலாளராக நியமிக்கப்பட்ட திருச்சிற்றம்பலத்திற்கு அதிமுக நிர்வாகிகள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.