தூத்துக்குடி மத்திய வடக்கு பகுதி அதிமுக சார்பில் கோடைகால நீர் மோர் பந்தல்-முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் திறந்து வைத்தார்.
அதிமுக பொதுச்செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிச்சாமி அறிவிப்பின்படி கோடைகால வெயிலிருந்து பொதுமக்களை காக்கும் விதமாக நீர் மோர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சியை மாவட்ட முழுவதும் திறக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தி இருந்தார்.
அதனை தொடர்ந்து 12/04/23 இன்று தூத்துக்குடியில் மத்திய வடக்கு பகுதி அதிமுக சார்பில் மத்திய வடக்கு பகுதி செயலாளர் ஜெய்கணேஷ் ஏற்பாட்டில் அவரது அலுவலகம் முன்பு அமைக்க பட்டு இருந்த நீர் மோர் பந்தல் பழைய மாநகராட்சி அலுவலகம் முன்பு முன்னாள் மாவட்ட செயலாளர் முன்னாள் நகர் மன்ற தலைவருமான ஹென்றி தாமஸ் ஏற்பாட்டில் நீர்மோர் மற்றும் நலத்திட்ட உதவிகளையும் வழங்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நீர் மோர் பந்தலை முன்னாள் அமைச்சர் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் எஸ். பி.சண்முகநாதன் திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர்மோர், ரோஸ் மில்க்,கரும்புச்சாறு,மற்றும் தர்பூசணி,சாத்துக்குடி திராட்சை,தேங்காய் பூ, ஆகிய பழவகைகளையும் மற்றும் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் அவைத் தலைவர் திருப்பாற்கடல், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், அமைப்புச் செயலாளர் சின்னதுரை, முன்னாள் மேயர் அந்தோணிகிரேஸி,மேற்கு பகுதி செயலாளர் முருகன்,39 வது வார்டு வட்ட செயலாளர் திருச்சிற்றம்பலம், வடக்குப்பகுதி இளைஞரணி செயலாளர் டைகர் சிவா, 51 வது வார்டு மாமன்ற உறுப்பினர் எதிர்க்கட்சி கொறடா மந்திரமூர்த்தி,வழக்கறிஞர் யு எஸ் சேகர்,வட்ட செயலாளர்கள் நவ்சத், ஜெயகுமார்,ஈஸ்வரன், விஜயன்,உதயசூரியன், ரகுநாதன்,மாவட்ட பிரதிநிதி செல்லப்பா, வழக்கறிஞர் ராஜ்குமார் பகுதி மகளிர் அணி செயலாளர் ராஜேஸ்வரி, முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள் மெஜிலா,சந்திரா, வட்ட பிரதிநிதிகள் நாராயணன்,பெருமாள்,சாகுல் ஹமீது பாபு, ஐடி விங் ரியாஸ், மற்றும் கட்சியின் நிர்வாகிகள் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.