தூத்துக்குடி மத்திய ஒன்றிய திமுக இளைஞரணி சார்பில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு மருத்துவ முகாம் - சண்முகையா எம்எல்ஏ துவக்கி வைத்தார்.

தூத்துக்குடி மத்திய ஒன்றிய திமுக இளைஞரணி சார்பில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு மருத்துவ முகாம் - சண்முகையா எம்எல்ஏ துவக்கி வைத்தார்.

தூத்துக்குடி மத்திய ஒன்றிய திமுக இளைஞரணி சார்பில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு நாகர்கோவில் பெஜான்சிங் கண் மருத்துவமனை மற்றும் தூத்துக்குடி திரவியம் எலும்பு முறிவு மருத்துவமனைஇணைந்து நடத்தும் இலவச கண் சிகிச்சை மற்றும் எலும்பு முறிவு சிகிச்சை முகாம் புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது.

இந்த முகாமினை ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம் தெற்கு மாவட்ட திமுக ஒன்றிய இளைஞரணி செயலாளர் சண்முக நாராயணன் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.