தமிழ்ப் புதல்வன் திட்ட தொடக்க விழா - சண்முகையா எம்எல்ஏ திட்டத்தை தொடங்கி வைத்து மாணவர்களுக்கு டெபிட் கார்டுகளை வழங்கினார்.
அரசு பள்ளி மாணவர்கள் மேல்நிலைகல்வி முடித்து உயர்கல்வி பயிலும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் மாதம் ரூபாய் 1000 வழங்கும் திட்டமான தமிழ்ப் புதல்வன் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு க.ஸ்டாலின் இன்று கோவையில் தொடங்கி வைத்தார்.
அதன்படி ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற தமிழ்ப் புதல்வன் திட்ட தொடக்க விழாவில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு திட்டத்தை தொடங்கி வைத்து மாணவர்களுக்கு டெபிட் கார்டுகளை வழங்கினார்.
இந்தநிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் கோ.லட்சுமிபதி மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன் மாவட்ட சமூக நல அலுவலர் பிரேமலதா வருவாய் கோட்டாட்சியர் பிரபு வட்டாட்சியர் சிவகுமார் மாவட்ட ஊராட்சி தலைவர் பிரம்மசக்தி கருங்குளம் ஒன்றிய கழகச் செயலாளர்கள் ராமசாமி சுரேஷ் காந்தி வல்லநாடு ஊராட்சி மன்ற தலைவர் சந்திரா முருகன் தகவல் தொழில்நுட்ப பிரிவு சஞ்சய் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.