தமிழ்நாடு துணை முதல்வரும் இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு அனைத்தலையூரில் நடைபெற கபாடி போட்டியில் சண்முகையா எம்எல்ஏ பங்கேற்பு.

திருநெல்வேலி மத்திய மாவட்டம் மானூர் கிழக்கு ஒன்றியம் திமுக மற்றும் அணைத்தலையூர் இளைஞரணி சார்பில் தமிழ்நாடு துணை முதல்வரும் இளைஞரணி செயலாளரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு கங்கைகொண்டான் ஊராட்சி அனைத்தலையூரில் நடைபெற்ற மாபெரும் மாநில அளவிலான பெண்களுக்கான கபாடி போட்டியில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டியை கண்டு களித்து வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் தென்காசி முன்னாள் வடக்கு மாவட்ட மாவட்ட கழக செயலாளர் வழக்கறிஞர் துரை மானூர் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் அருள்மணி தச்சை பகுதி கழக செயலாளர் சுப்பிரமணியன் துணை மேயர் ராஜீ அர்ஜுனா விருது பெற்ற கபாடி வீரர் மணத்தி கணேசன் முன்னாள் மாவட்ட கழக துணை செயலாளர் மணி ஊர் தலைவர்கள் செல்வராஜ் கீர்த்தி கிளை செயலாளர் சந்திரன் விளையாட்டு ஒருங்கிணைப்பாளர்கள் மதன்ராஜ் குமார் தளபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.