ஒட்டப்பிடாரம் ஒன்றியக்குழு சாதாரண கூட்டம் - ஒட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் எல்.ரமேஷ் தலைமையில் நடைபெற்றது.

ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஒன்றியக்குழு உறுப்பினர்களுக்கான சாதாரண கூட்டம் ஒட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் எல்.ரமேஷ் தலைமையில் இன்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர்களின் கோரிக்கைகள் குறித்தும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
கூட்டத்தில் யூனியன் துணை சேர்மன் காசி விஸ்வநாதன் யூனியன் ஆணையாளர் சசிகுமார் வட்டார வளர்ச்சி அலுவலர் சித்தார்த்தன் மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் அனைத்து துறை சார்ந்த அலுவலர்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலக பெருமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.