ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் வாலசமுத்திரம் ஊராட்சியில் பல்வேறு திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் நிறைவுற்ற கட்டுமான பணிகளை சண்முகையா எம்எல்ஏ ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி ஒட்டப்பிடாரம் ஊராட்சி வாலசமுத்திரம் கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தில் 6.50 லட்சம் மதிப்பீட்டில் பயணிகள் நிழற்குடை கட்டும் பணிக்கும் வெங்கடேஸ்வரபுரம் கிராமத்தில் 18 லட்சம் மதிப்பீட்டில் 30000 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டும் கட்டும் பணிகளுக்கும் அடிக்கல் நாட்டியும்
வெங்கடேஸ்வரபுரம் கிராமத்தில் 12.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு பணிகள் முடிவுற்ற நியாய விலை கடை கட்டிடத்தையும்வெங்கடேஸ்வரபுரம் கிராமத்தில் 1.55 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு பணிகள் முடிவுற்ற உயர்மட்ட மேம்பாலத்தையும் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் ஒட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ் யூனியன் ஆணையாளர் சசிகுமார் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரா உதவி பொறியாளர் காயத்ரி பணி மேற்பார்வையாளர் பரமசிவன் வருவாய் ஆய்வாளர் செல்வலட்சுமி ஊராட்சி மன்ற துணை தலைவர் துணை தலைவர் வலசை.அசோக்குமார் கிராம நிர்வாக அலுவலர் ரமேஷ் ஊராட்சி மன்ற தலைவர் மகேஸ்வரி சரவணசெல்வி மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.