ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் ஒட்டப்பிடாரம் ஊராட்சி மேல லெட்சுமிபுரம் கிராமம் மற்றும் மேட்டூர் கிராமத்தில் பல்வேறு திட்ட பணிகளுக்கு சண்முகையா எம்எல்ஏ அடிக்கல் நாட்டினார்.
ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் ஒட்டப்பிடாரம் ஊராட்சி மேல லெட்சுமிபுரம் கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தில் 10 லட்சம் மதிப்பீட்டில் கலையரங்கம் கட்டும் பணிக்கும் மேட்டூர் கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தில் 10 லட்சம் மதிப்பீட்டில் கலையரங்கம் கட்டும் பணிகளுக்கும் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்கள்.
இந்த நிகழ்ச்சியில் ஒட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ் யூனியன் ஆணையாளர் சசிகுமார் உதவி பொறியாளர் திரு.ஜெயபால் வருவாய் ஆய்வாளர் ஜெயக்குமார் நகரச் செயலாளர் பச்சை பெருமாள்மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு துணை அமைப்பாளர் மாடசாமி ஒன்றிய தொண்டரணி அமைப்பாளர் கோபால் ஒன்றிய பொறியாளர் அணி அமைப்பாளர் மணிகண்டன் அரசு ஒப்பந்ததார் முருகன் தெற்குப் பரும்பூர் ராஜாமணி தெற்கு ஆவரங்காடு கிருஷ்ணசாமி ஒட்டப்பிடாரம் உலகையா கிளை செயலாளர் இளங்கோ மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.