மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் தீர்வு காணப்பட்ட மனுக்களுக்கான ஆணையை இன்று மேயர் ஜெகன் பெரியசாமி வழங்கினார்.

மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் தீர்வு காணப்பட்ட மனுக்களுக்கான ஆணையை இன்று மேயர் ஜெகன் பெரியசாமி வழங்கினார்.

தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டல அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில், சொத்து வரி நிர்ணயம், சொத்துரி பெயர் மாற்றம், புதிய குடிநீர் இணைப்பு, தண்ணீர் கட்டண பெயர் மாற்றம், கட்டிட அனுமதி, ஆக்கிரமிப்புகள் அகற்றுதல், பொதுச் சுகாதாரம், உரிமை ஆணை கட்டணங்கள், தொழில்வரி, பாதாள சாக்கடை உள்ளிட்ட மாநகராட்சி சேவை குறித்து பொதுமக்கள் மனு அளித்தனர். 

இந்த முகாமில் 97 மனுக்கள் பெறப்பட்டது. 27 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதில் 15 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. 8 மனுக்கள் பரிசீலனையில் உள்ளது எனவும் இந்நிலையில், மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் தீர்வு காணப்பட்ட மனுக்களுக்கான ஆணையை இன்று மேயர் ஜெகன் பெரியசாமி வழங்கினார். 

பின்னர் அவர் பேசும்போது, "அரசு நிர்வாகம் மக்களை தேடி செல்ல வேண்டும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார். அதன்படி தூத்துக்குடியில் ஒவ்வொரு புதன்கிழமையும் மக்களை சந்தித்த குறைகளை கேட்டறியவுள்ளோம். இதன் மூலம் மக்களின் குறைகள் தீர்க்கப்படும், மாநகராட்சியின் வருவாய் அதிகரிக்கும். ஒரு மாதத்தில் தீர்க்க வேண்டிய பிரச்சனைகளை ஒரே நாளில் தீர்த்து வைத்த அதிகாரிகளை பாராட்டுகிறேன் என்று தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் மதுபாலன், துணை மேயர் ஜெனிட்டா, மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.