எட்டயபுரத்தில் அதிமுக நகரக் கழகச் செயலாளர் ராஜகுமார் ஏற்பாட்டில் அமைக்கப்பட்டிருந்த நீர் மோர் பந்தலை முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு எம்எல்ஏ திறந்து வைத்தார்.

எட்டயபுரத்தில் அதிமுக நகரக் கழகச் செயலாளர் ராஜகுமார் ஏற்பாட்டில் அமைக்கப்பட்டிருந்த நீர் மோர் பந்தலை முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு எம்எல்ஏ திறந்து வைத்தார்.

தமிழகத்தில் வெயிலின் தாக்கத்தின் காரணமாக தாகம் தணிக்கும் வகையில் அம்மா ஆசியோடு கழக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆணைக்கிணங்க கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் எதிர்க்கட்சி பொருளாளர் முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ. ராஜூ ஆலோசனைப்படி ,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன்மு ன்னிலையில் எட்டையபுரம் நகர செயலாளர் ராஜகுமார் ஏற்பாட்டில் எட்டையபுரத்தில் பொது மக்களின் தாகம் தணிக்கும் வகையில் நீர் மோர் பந்தல் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அதிமுக வடக்கு மாவட்ட செயலாளர்  கடம்பூர் செ. ராஜு திறந்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து  நீர் மோர் பழரசம் சர்பத் தர்பூசணி இளநீர் போன்ற குளிர்பான வகைகளை முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு எம்எல்ஏ பொதுமக்களுக்கு வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் கண்ணன் சுப்புராஜ் ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர், எட்டயபுரம் அவைத்தலைவர் கணபதி, வார்டு செயலாளர்கள், கார்டன் பிரபு, சின்னத்துரை, கருப்பசாமி, சிவ சிவா , ஜெயக்குமார், சீனா என்ற முத்துகிருஷ்ணன், சொக்கன், சிவசங்கர பாண்டியன், மூர்த்தி, செல்வி, சாந்தி, ரத்தினம் , மாவட்ட கழக நிர்வாகிகள் வேலுச்சாமி, மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.