திருச்செந்தூர் கோவிலில் தங்கும் விடுதிகள் இல்லாததால் தனியார் தங்கும் விடுதியில் வசூல் வேட்டை.

திருச்செந்தூர் கோவிலில் தங்கும் விடுதிகள் இல்லாததால் தனியார் தங்கும் விடுதியில் வசூல் வேட்டை.

திருச்செந்தூர் ஒரு சுற்றுலா ஸ்தலமாக விளங்கிவருவதால் இங்கு சுவாமி தரிசனம் செய்ய தினமும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அப்படி இங்கு வரும் பக்தர்கள் தங்குவதற்கு தங்கும் விடுதிகள் இல்லாததால் பக்தர்கள் தனியார் விடுதிகளை நாடிச்செல்லவேண்டிய சூழ்நிலைக்கு ஆளாகி உள்ளனர்

முன்பு கோவில் வளாகத்தில் பக்தர்கள் தங்க வேலவன் விடுதி, செந்திலாண்டவர் விடுதி, ஜெயந்திநாதர் விடுதி, காட்டேஜ், உள்ளா பல்வேறு விடுதிகள் இருந்தது. தற்போது திருப்பணிகள் நடைபெறுவதால இடிக்கப்பட்டுள்ளது. 

இதனால் தற்போது கோவில் விடுதி 30 ரூம்களுக்கும் குறைவாக உள்ளது. அதுவும் ஆன்லையனில் முன்பதிவு செய்வதால் அதுவும் கிடைக்காத சூழ்நிலையில் பக்தர்கள் தனியார் விடுதியில் சென்று தங்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. அப்படி தனியார் விடுதியை தேடிச் செல்லும் பக்தர்களிடம் தனியார் விடுதியை நடுத்துபவர்கள் வசூல் வேட்டை நடத்தி வருகின்றனர். இரண்டு நபர் தங்குவதற்கு ரூ 1200 முதல் 2500 வரை வாடகை வசூல் செய்கின்றனர். 

இரண்டு நபருக்குக்கு மேல் ஒரு ரூமில் யாரும் தங்க முடியாது டபுள் பெட், டிபிள் பெட்,டீலக்ஸ், சூப்பர் டீலக்ஸ், எனவேவ் வேறுவகையில் வாடகை வசூல் செய்கின்றனர், இதனால் பக்தா்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். 12 மணி நேரத்திற்கு மேல் பக்தர்கள் விடுதியில் தங்குவது அரிது

தற்போது திருச்செந்தூரை சுற்றி சுமார் 70க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகள் உள்ளதாக கூறப்படுகின்றது. நிறைய விடுதிகளில் கார் நிப்பாட்டுவதற்குக் கூட இடம் இல்லாமல் கோவில் வளாகத்தில் கொண்டு நிறுத்து கின்றனர்.

பக்தர்கள் அவதிப்படும் நிலையை மாற்ற கோவில் நிர்வாக தற்போது கட்டிமுடிந்து தயார்நிலையில் உள்ள விடுதிகளை திறந்துவிட ஏற்பாடு செய்ய வேண்டுமென பக்தர்களும் சமூகநல ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.