டி.எம்.எம் கல்லூரியில் 2023 ஆண்டுக்கான பள்ளி மாணவ மாணவிகளுக்கான திறனறியும் போட்டி.

டி.எம்.எம் கல்லூரியில் 2023 ஆண்டுக்கான பள்ளி மாணவ மாணவிகளுக்கான திறனறியும் போட்டி.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தாலுகா குளத்தூர் டி. எம். எம் கல்லூரியில் பள்ளி மாணவ மாணவிகளுக்கான திறனறியும்  2023 ஆண்டுக்கான போட்டி நடைபெற்றது. 

இவ்விழா கல்லூரியின் இயக்குனர் முனைவர் கோபால்  தலைமையில் நடைபெற்றது ஆங்கிலத்துறை பேராசிரியை செல்வி பிரதீபா வரவேற்புரை நிகழ்த்தினார். கல்லூரியின் முதல்வர் முனைவர் அன்பழகன் வாழ்த்துரை வழங்கி போட்டிகளை துவக்கி வைத்தார்.

போட்டியில் வண்ணக் கோலம் இடுதல், பேச்சு போட்டி, ஓவிய போட்டி, தனி நடன போட்டி, வார்த்தைகளை சேர்க்கும் போட்டி, குழு நடன போட்டி என பல்வேறு விதமான போட்டிகள் நடைபெற்றது. போட்டியில் மாணவ மாணவிகள் ஆர்வத்தோடு கலந்து கொண்டனர். 

ஒவ்வொரு போட்டியிலும் முதல் இரண்டு இடங்களில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளும் பதக்கங்களும் வழங்கப்பட்டன. பங்கேற்ற அனைத்து மாணவ மாணவிகளுக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. 

தமிழ்த்துறை பேராசிரியர்கள்  மகாலட்சுமி மற்றும் செல்வி பிரீத்தி ஆகியோர் நிகழ்ச்சிகளை அழகாக தொகுத்து வழங்கினர். விழாவிற்கான ஏற்பாட்டினை கணிதத்துறை பேராசிரியை செல்வ லட்சுமி அனைத்து பேராசிரியர்கள் உதவியோடு சிறப்பாக செய்திருந்தார்.

நிகழ்ச்சியின் இறுதியில் கல்லூரியின் தமிழ் துறை பேராசிரியை முனைவர் அன்னலட்சுமி  நன்றியுரையாற்றினார்.