பசுவந்தனை அருகே நள்ளிரவில் டிரான்ஸ்பார்மர் மீது லாரி மோதி விபத்து அடியோடு சாய்ந்த ட்ரான்ஸ்பார்மர்.

பசுவந்தனை அருகே நள்ளிரவில் டிரான்ஸ்பார்மர் மீது லாரி மோதி விபத்து அடியோடு சாய்ந்த ட்ரான்ஸ்பார்மர்.

தூத்துக்குடி மாவட்டம் பசுவந்தனை எப்போதுவென்றான் சாலையில் நள்ளிரவில் லாரி மோதி டிரான்ஸ்பார்மர் அடியோடு சாய்ந்து அந்தப் பகுதியில் மின் வினியோகம துண்டிப்பு.

பசுவந்தனை எப்போதும் வென்றான் சாலையில் நள்ளிரவில் தூக்க கலக்கத்தில் டிரான்ஸ்பார்மர் மீது லாரி மோதி டிரான்ஸ்பார்மர் அடியோடு சாய்ந்து ஓட்டுநர் எந்த காயங்களும்யின்றி உயிர் தப்பினார் .

இந்த விபத்தினால் அந்தப் பகுதியில் மின் வினியோகம் இரவு முழுவதும் துண்டிக்கப்பட்டது இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் மின்சாரம் இல்லாமல் மிகுந்த சிரமம் அடைந்தனர். இதனை அறிந்த பசுவந்தனை காவல் நிலையத்தினர் விபத்து நடந்த பகுதிக்கு வந்து விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டு வழக்கு பதிவு செய்து லாரி ஓட்டுநர் குடிபோதையில் இருந்தாரா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த விபத்தினால் டிரான்ஸ்பார்மர் அடியோடு சாய்ந்ததனால் அந்தப் பகுதியில் தற்போது வரை மின்சாரம் இல்லாமல் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி உள்ளனர் இதனை உடனடியாக மின்வாரியம் சரி செய்து கொடுக்குமாறு பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.