தூத்துக்குடியில் 3 கோடி மதிப்பீட்டில் கால்நடை பன்முக மருத்துவமனை முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

தூத்துக்குடியில் 3 கோடி மதிப்பீட்டில் கால்நடை பன்முக மருத்துவமனை முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

தூத்துக்குடி புதுக் கிராமத்தில் 3 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கால்நடை பன்முக மருத்துவமனையினை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (20.08.2024) காலை நடைபெற்ற நல திட்டங்கள், மற்றும் அரசாணை வழங்கும் நிகழ்ச்சியினை கொடியசைத்து தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின் தூத்துக்குடி மாநகராட்சி புதுக் கிராமத்தில் உள்ள கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்குனர் அலுவலக வளாகத்தில் 3 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கால்நடை பன்முக மருத்துவமனையை காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

தூத்துக்குடியில் முதல்வர் அவர்களால் திறந்து வைக்கப்பட்ட பன்முக கால்நடை மருத்துவமனையை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சரும், வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான அமைச்சர் கீதா ஜீவன் குத்து விளக்கு ஏற்றி அலுவலக வளாகத்தினை பார்வையிட்டார்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ், சஞ்சீவி ராஜ், இணை இயக்குநர், செல்வக்குமார், துணை இயக்குநர், ஆண்டனி இக்னேசியஸ் சுரேஷ், உதவி இயக்குநர், விஜயா உதவி இயக்குநர் கோவில்பட்டி, ஜோசப் ராஜ், பிரதம மருத்துவர், மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், முன்னாள் மாமன்ற உறுப்பினர் கோட்டு ராஜா, தூத்துக்குடி பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில் குமார், கவுன்சிலர்கள் ராமகிருஷ்ணன், விஜயலட்சுமி, அன்னலெட்சுமி, வைதேகி, முன்னாள் மேயர் கஸ்தூரி தங்கம், மாவட்ட ஆதிதிராவிடர் நல அணி தலைவர் பெருமாள், மாவட்ட மருத்துவர் அணி தலைவர் அருண் குமார், மாவட்ட பிரதிநிதி நாராயண், மற்றும் அலுவலக பணியாளர்கள், கட்சி உறுப்பினர்கள், என பலர் கலந்து கொண்டனர்.