தூத்துக்குடி வனக்கோட்டத்தில் வனவிலங்கு வார கொண்டாட்டம் - வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

தூத்துக்குடி வனக்கோட்டத்தில் வனவிலங்கு வார கொண்டாட்டம் - வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

தூத்துக்குடி வனக்கோட்டத்தில் வனவிலங்கு வாரம் கொண்டாட்டம் நடைபெற்றது வனவிலங்கு வாரம் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, தூத்துக்குடி வனவிலங்குகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து வினாடி வினா போட்டியு நடைபெற்றது . வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஆமை பாதுகாப்பு, குதிரைமொழிதேரி மற்றும் வல்லாநாடு வெளிமான் சரணாலயம் பற்றிய ஆவணப்படங்களும் மாணவர்களுக்குக் காட்டப்பட்டன. 

மஞ்சப்பை பை மற்றும் பனை விதைகள் மாணவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. நிலையான வாழ்க்கை முறையை பின்பற்ற மாணவர்கள் ஊக்குவிக்கப்பட்டனர். 

இந்த நிகழ்ச்சியில் துறை சார்ந்த அதிகாரிகள் அலுவலர்கள் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.