விட்டிலாபுரத்தில் ரூ. 9.50 லட்சம் மதிப்பில் புதிய கலையரங்கம் - ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா திறந்து வைத்தார்.

விட்டிலாபுரத்தில் ரூ. 9.50 லட்சம் மதிப்பில் புதிய கலையரங்கம் - ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா திறந்து வைத்தார்.

ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி கருங்குளம் ஊராட்சி ஒன்றியம் விட்டிலாபுரம் ஊராட்சி வள்ளுவர் நகரில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம் ரூ. 9.50 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட கலையரங்க கட்டிடத்தை ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா திறந்து வைத்தார். 

இந்த நிகழ்ச்சியில் திருவைகுண்டம் வட்டாட்சியர் ரத்தினாசங்கர் வட்டார வளர்ச்சி அலுவலர் வசந்தா வருவாய் ஆய்வாளர் பிரபாவதி உதவி பொறியாளர் மாரியப்பன் ஒன்றிய கழக செயலாளர் ராமசாமி ஒன்றிய கவுன்சிலர் குமார் ஒன்றிய துணை செயலாளர் சுரேஷ் ஒன்றிய இளைஞரணி மாசிலாமணி சதீஷ்குமார் அயலக அணி சஞ்சய் மற்றும் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.