தூத்துக்குடி அறிஞர் அண்ணா பேருந்து நிலையம் வரும் 30 தேதியன்று மக்கள் பயன்பாட்டிற்கு வருகிறது மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்.
தூத்துக்குடி மாநகராட்சி தூத்துக்குடி அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தை சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் ரூபாய் 51 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் மேம்படுத்தும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மீதமுள்ள மின் தூக்கி மின் விளக்குகள் மற்றும் வர்ணம் பூசும் பணிகளும் இம்மாத இறுதிக்குள் நிறைவுபெற்று வருகிற 30-ம் தேதி முதல் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வர இருக்கும் நிலையில், இறுதிகட்ட பணிகளை இன்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் மாமன்ற உறுப்பினர் கீதா முருகேசன் முன்னாள் மாமன்ற உறுப்பினர் . கோட்டு ராஜா மற்றும் பலர் உடன் இருந்தனர்.