சீதாராம் யெச்சூரி மறைவு தூத்துக்குடியில் அமைதி பேரணி - சண்முகையா எம்எல்ஏ பங்கேற்பு.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் தோழர்.சீதாராம் யெச்சூரி மறைவுக்கு இரங்கல் தெரிவித்திடும் வகையில் அனைத்து கட்சியின் சார்பில் தூத்துக்குடி ராஜாஜி பூங்கா முன்பிருந்து பழைய பேருந்து நிலையம் வரை சென்ற அமைதி பேரணியில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா கலந்து கொண்டார்.
இந்த அமைதி பேரணியில் தூத்துக்குடி மாநகர செயலாளர் ஆனந்த சேகரன் ஒன்றிய கழக செயலாளர்கள் ஜெயக்கொடி சரவணகுமார் 3 ஆவது வார்டு வட்ட செயலாளர் ரெங்கசாமி த காங்கிரஸ் கட்சியின் சண்முகம் முரளிதரன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் ஆறுமுகம் மற்றும் திராவிட முன்னேற்ற கழகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தோழர்கள் தூத்துக்குடி திமுக வடக்கு தெற்கு மாவட்டத்தை சார்ந்த நிர்வாகிகள் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.