ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய திமுக செயல் வீரர்கள் கூட்டம் எம்பி கனிமொழி தலைமையில் நடைபெற்றது.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி உட்பட்ட ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் செயல் வீரர்கள் கூட்டம் குறுக்குச்சாலையில் நடைபெற்றது.
இந்த செயல்வீரர்கள் கூட்டமானது தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினரும்,கழக துணை பொது செயலாளருமான கனிமொழி கருணாநிதி தலைமையிலும்,சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளருமான கீதாஜீவன் முன்னிலையிலும் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் எம்பி கனிமொழி அமைச்சர் கீதா ஜீவன் எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மாநில நெசவாளர் அணி துணை செயலாளர் வசந்தம் A.C ஜெயக்குமார்,ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய செயலாளரும்,ஒன்றிய துணை பெருந்தலைவருமான காசிவிஸ்வநாதன், கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீதகண்ணன்,விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன்,ஒன்றிய அவைத்தலைவர் இளையபெருமாள்,தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் இம்மானுவேல்,மகேந்திரன் மாவட்ட பிரதிநிதிகள் சத்தியராஜன்,தளவைராஜா ஒன்றியக்குழு உறுப்பினர்கள் வெள்ளைச்சாமி,ராஜ், ஊராட்சி மன்ற தலைவர்கள் முத்துக்குமார்,சண்முகையா, முத்துராஜ்,சங்கர் ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் கிளை கழக செயலாளர்கள் அணி நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.