சாலை விபத்தில் படுகாயமடைந்த இளைஞர்களுக்கு, ஓடி வந்து உதவிய கனிமொழி கருணாநிதி எம்.பி
தூத்துக்குடி நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி, ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட புதியம்புத்தூரில் பகுதியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, புதியம்புத்தூரில் இருந்து ஓட்டப்பிடாரம் செல்லும் வழியில் சாலை விபத்தில் அடிபட்டுக் கிடந்த இளைஞர்களைக் கண்டதும், தனது காரை விட்டு இறங்கிப் படுகாயமடைந்த இளைஞருக்கு முதல் உதவி சிகிச்சை அளித்தார்.
கனிமொழி கருணாநிதி எம்பி உடனடியாக 108 ஆம்புலன்ஸ் உதவி எண்ணைத் தொடர்பு கொண்டு, ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு விபத்தில் படுகாயம் அடைந்த நபருக்கு ஆறுதல் கூறி அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி உடன் இருந்தனர்.