தூத்துக்குடியில் வழக்கறிஞர் படுகொலை: அருணா தேவி ரமேஷ் பாண்டியன் கண்டனம்.
தூத்துக்குடியில் வழக்கறிஞர் முத்துக்குமார் நேற்று மதியம் சோரீஸ்புரம் பகுதியில் மர்ம நபர்களால் பயங்கர ஆயுதங்களைக் கொண்டு வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
இந்த படுகொலையை கண்டித்து மக்கள் நல உரிமை அமைப்பாளர் அருணா தேவி ரமேஷ் பாண்டியன் விடுத்துள்ள அறிக்கையில்;
நீதிக்காக போராடிய வக்கீல் முத்துக்குமார், ஆட்சியர் மற்றும் எஸ்பி அலுவலகம் அருகில் பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்டது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதனால் பொதுமக்கள் பெரும் அச்சம் அடைந்துள்ளனர். சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. நீதிக்காக போராடிய வழக்கறிஞருக்கு மாவட்ட நிர்வாகம் பாதுகாப்பு வழங்காததே இக்கொலைக்காண காரணம் எனவே அரசே முழு பொருப்பையும் ஏற்று . குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படவேண்டும், கடுமையான தண்டனை வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்க்கு அரசு வேலையும் ,5 கோடி ரூபாய் நஷ்டஈடாக அரசு வழங்க ஆவணம் செய்யவேண்டும் என தமிழக அரசை கேட்டுக் கொண்டுள்ளார்.