தூத்துக்குடியில் வழக்கறிஞர் முத்துக்குமார் படுகொலை; குற்றவாளிகளை கைது செய்யும் வரை நீதிமன்றத்தை புறக்கணிக்க முடிவு.

தூத்துக்குடியில் வழக்கறிஞர் முத்துக்குமார் படுகொலை; குற்றவாளிகளை கைது செய்யும் வரை நீதிமன்றத்தை புறக்கணிக்க முடிவு.

தூத்துக்குடியில் வழக்கறிஞர் முத்துக்குமார் நேற்று மதியம் சோரீஸ்புரம் பகுதியில் மர்ம நபர்களால் பயங்கர ஆயுதங்களைக் கொண்டு வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

தூத்துக்குடி வழக்கறிஞர்கள் சங்கத்தின் உறுப்பினர் வழக்கறிஞர் முத்துக்குமார் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து, குற்றவாளிகளை காவல்துறை விரைந்து கைது செய்து குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தியும் குற்றவாளிகளை கைது செய்யும் வரை காலவரையற்ற நீதிமன்ற புறக்கணிப்பு செய்யவும்.

குற்றவாளிகளுக்காக எந்த நீதிமன்றத்தில் பிணை மனு தாக்கல் செய்தாலும் சங்கம் சார்பாக Intervener மனு தாக்கல் செய்யவும்,குற்றவாளிகளை கைது செய்யும் வரை  காவல் துறையினருக்கு நீதிமன்ற வளாகத்திற்குள் அனுமதியில்லை எனவும் வழக்கறிஞர் சங்கத்தின் சார்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.