ஹாப்பி நியூஸ் 6 நாட்கள் பொங்கல் விடுமுறை ஜாலியா இருங்க பொங்கல... கொண்டாடுங்க...

ஜனவரி 17ம் தேதியும் அரசு விடுமுறை ஒரு வாரம் ஹாப்பியா இருங்க...

தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் பண்டிகைகளில் மிகப்பெரிய பண்டிகை பொங்கல் பண்டிகை ஆகும். பொங்கல் பண்டிகையானது தமிழர்களின் அடையாளமாக திகழ்கிறது. நடப்பாண்டிற்கான பொங்கல் பண்டிகை வரும் ஜனவரி 14, 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் கொண்டாடப்படுகிறது.

இந்த நிலையில், பொதுமக்களின் வசதிக்காக ஜனவரி 17ம் தேதி ( வெள்ளிக்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்திற்காக அரசு விடுமுறை அளிக்கப்படுதவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த நாளில் அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.