கூட்டுறவு கொள்கை விளக்க விழிப்புணர்வு பேரணி - மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமிபதி கொடியசைத்து தொடங்கி வைத்தார்!.
தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி 30 ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இவ் வங்கி தற்போது 27 கிளைகளுடன் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள விவசாயிகள், வியாபாரிகள், மகளிர்கள், மாற்றுத்திறனாளிகள், மற்றும் பொதுமக்களின் பொருளாதாரம் முன்னேற்றத்திற்கு கடன் உதவி செய்து வருகிறது.
மேலும் தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்படும் அரசு திட்டங்களை வங்கி மூலம் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. எனவே கூட்டுறவு கொள்கைகள் மற்றும் தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் மாவட்டத்திலேயே அதிக வட்டி வழங்கும் இட்டு வைப்பு திட்டங்கள், பல்வேறு கடன் திட்டங்கள், குறிப்பாக மகளிர் சுய உதவி குழு கடன், பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் எடுத்துக் கூறி பேரணி (17.07.2024 காலை 9 மணிக்கு எட்டையாபுரம் சாலையில் அமைந்துள்ள வங்கி தலைமை அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமிபதி பேரணியை குடியரசுத் துவக்கி வைத்தார்.
பேரணியானது எட்டையாபுரம் ரோடு புதிய பேருந்து நிலையம் வழியாக குருஸ் பர்னாந்து சிலை தொடர்ந்து பால விநாயகர் கோவில் தெரு, அண்ணா சிலை ரவுண்டானா, சென்று ராஜ் ஓட்டல் ரோடு, பக்கில் ஓடை ரோடு, 4ஆம் ரயில்வே கேட் வழியாக வந்து தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைமை அலுவலகத்தில் நிறைவடைந்தது.
விழிப்புணர்வு பேனர்கள், கொள்கைகள் மற்றும் கடன் தொடர்பான அட்டைகளுடன் பேரணியில் வங்கி பணியாளர்கள், ஒப்பந்த பணியாள ர்கள், நகை மதிப்பீட்டு முகவர்கள், மற்றும் மகளிர் உறுப்பினர்கள் 250 நபர்கள் கலந்து கொண்டனர்.
வங்கியின் MOBILE ATM VAN மற்றும் BANK OF WHEELS வாகனத்தின் ஒலிபெருக்கி மூலம் கொள்கை விளக்கம் மேற்கொள்ளப்பட்டது.
மத்திய கூட்டுறவு வங்கி வழியாக செயல்படுத்தப்படும் அரசு திட்டங்கள்:-
1.கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் நிதி உதவி
2.தமிழ் புதல்வன் நிதியுதவி திட்டம்
3.கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம்
4.அரசு தள்ளுபடி திட்டங்கள்
5.மத்திய மாநில அரசு மானியங்கள்
மத்திய கூட்டுறவு வங்கி மூலம் வழங்கப்படும் கடன் திட்டங்கள்
1.வீட்டு வசதி கடன்
2.வீடு அடமான கடன்
3.குறைந்த வட்டியில் தங்க நகை கடன்
4.சம்பளக் கடன்
5.பணிபுரியும் மகளிர் கடன்
6.மகளிர் சுய உதவி குழு கடன்
7.கல்விக் கடன்
8.விவசாயிகளுக்கு பயிர் கடன்
9.கறவை மாட்டுக் கடன்
10.மகளிர் தொழில் முனைவோர் கடன்
11.நாட்டுப்புற கலைஞர்கள் கடன்
12.மாற்றுத் திறனாளிகளுக்கான அரசு ஒதுக்கீடு செய்து வீடு கட்டும் கடன்
13.நாட்டுப்புற கலைஞர் கடன்
14.சிறு வணிகர் கடன்
15.கூட்டுறவு வேளாண் இயந்திர மயமாக்கல் கடன்
16.தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கடன்
17.தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கடன்
18.தேசிய ஊனமுற்றோர் நிதி மற்றும் மேம்பாட்டு கடன்
19.கைம்பெண்கள் மற்றும் கணவரால் கைவிடப்பட்ட பெண்கள் கடன்
20.MSME கடன்
பேரணி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அலுவலர்கள் இணை பதிவாளர் மேலாண்மை இயக்குனர் நடுக்காட்டுராஜா, பொது மேலாளர் சரவணன், முதன்மை வருவாய் அலுவலர் விஜயன், உதவி பொது மேலாளர் சீனிவாசன், உதவி பொது மேலாளர் பூமிச்செல்வி, மற்றும் மேலாளர்கள், கள அலுவலர்கள், பணியாளர்கள் உட்பட பலர் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.