ஒட்டப்பிடாரம் அயிரவன்பட்டியில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 6 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு - எம்எல்ஏ சண்முகையா யூனியன் சேர்மன் ரமேஷ் மாலை அணிவித்தும் மலர் தூவியும் மரியாதை செலுத்தினர்.
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி 6 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அன்னாரின் புகழினை போற்றிடும் வகையில்
ஒட்டப்பிடாரம் மேற்கு ஒன்றியம் அயிரவன்பட்டியில் கலைஞர் கருணாநிதியின் திருவுருவப்படத்திற்கு ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினரும் ஒட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய கழகச் செயலாளருமான எம் சி.சண்முகையா ஒட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் எல் ரமேஷ் ஆகியோர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் இளைஞரணி மணிகண்டன் சிவக்குமார் தகவல் தொழில்நுட்ப அணி முருகன் ஒன்றிய பொறியாளர் அணி மணிகண்டன் மகளிரணி சுதா சுந்தரி பாக்கியலட்சுமி மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.