தூத்துக்குடி ஹோலிகிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பதவி ஏற்பு விழா நடைபெற்றது.

தூத்துக்குடி ஹோலிகிராஸ் ஹோம் சயின்ஸ் மாணவிகளுக்கு 30/06/23 இன்று பதவி ஏற்பு விழா நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினராக முனைவர் சுப்பு லட்சுமி கல்லூரி முதல்வர் ( பொறுப்பு ) ஏ .பி . சி மஹாலட்சுமி கல்லூரி தூத்துக்குடி கலந்து கொண்டு தலைமை வகித்தார் கல்லூரி முதல்வர் அருட்சகோதரி முனைவர் ரூபா துணை முதல்வர் முனைவர் மதுரவல்லி ஆகியோர் முன்னிலை வகித்தனர் .
தேர்தல் மூலம் மாணவிகளுக்கான தலைவராக ஆங்கில துறையை சார்ந்த ஜான்சி ராணி துணை தலைவராக உணவியல் துறையை சார்ந்த நிசித்தா செயலாளர்களாக வணிகவியல் துறையை சேர்ந்த சோபனா பொருளாளராக ஆங்கில முதுநிலை மாணவி ஓவியா ஆகியோர் தேர்ந்து எடுக்கப்பட்டனர்
எல்லா வகுப்பில் இருக்கும் மாணவிகளின் தலைவிகளுக்கும் மற்றும் கல்லூரியில் இயங்கும் பலவிதமான சங்ககளின் பொறுப்பாளர்களுக்கும் பதவி பிரமாணம் முனைவர் சுப்பு லட்சுமி செய்து வைத்தார்.
முனைவர் சுப்புலக்ஷ்மி பேசுகையில் மாணவிகளின் தன்னம்பிக்கை எவ்வாறு இருக்க வேண்டும் மனதில் உறுதி இருக்க வேண்டும்நாம் எதிர்கொள்ளும் கடினமான நேரம் நம்மை வாழ்க்கையில் இன்னும் சரியானதாகவும் வெற்றிகரமாகவும் ஆக்குகிறது . ஒருபோதும் கைவிடாதீர்கள் , புன்னகைத்து புதிய தொடக்கத்தை மட்டும் செய்யுங்கள் . என்று அழகான தமிழில் கூறினார்.