ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றிய பாக இளைஞர் அணி பொறுப்பாளர்களுடன் கலந்தாய்வு கூட்டம் - ஒன்றிய செயலாளர் இளையராஜா தலைமையில் நடைபெற்றது.

தூத்துக்குடி தெற்கு மாவட்டம் ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றிய பாக இளைஞர் அணி பொறுப்பாளர்களுடன் கலந்தாய்வு கூட்டமானது ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றிய செயலாளர் இளையராஜா தலைமையில் ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் அனிட்டன் முன்னிலையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் பால் துரை கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
ஒன்றியத்திற்கு உட்பட்ட பாக இளைஞர் அணி பொறுப்பாளர்களுக்கு சமூக வலைதள பயன்பாடு முறைகளை பற்றிய கலந்துரையாடல் நடைபெற்றது. கூட்டத்தில் ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றிய பாக இளைஞர் அணி பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கலந்து கொண்ட பாக இளைஞரணி அனைவருக்கும் ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் இளையராஜா பொன்னாடை அணிவித்து கௌரவித்தார்.