ஒட்டப்பிடாரம் நடுவக்குறிச்சியில் 7 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி - சண்முகையா எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.

ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் சாமிநத்தம் ஊராட்சி நடுவக்குறிச்சி காமராஜர் நகரில் 7 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகளை ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் ஒட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ் ஒன்றிய கவுன்சிலர் நவநீதகிருஷ்ணன் ஒன்றிய துணை கழகச் செயலாளர் சிவன் மாவட்ட மருத்துவர் அணி துணை அமைப்பாளர் தங்கவேல்சாமி மாவட்ட ஆதிதிராவிடர் அணி துணை அமைப்பாளர் மாடசாமி வர்த்தக அணி முத்துக்குமார் நெசவாளர் அணி ஈசன் சுரேஷ் சிறுபான்மை அணி ஞானதுரை மாணவரணி தங்கதுரை பாண்டியன் ஒன்றிய செயற்குழு உறுப்பினர் நல்லமுத்து ஊராட்சி மன்ற தலைவர் அருண்குமார் ஒன்றிய பொறியாளர் அணி மணிகண்டன் இளைஞரணி ஜெகன் பார்த்திபன் புதியம்புத்தூர் கிளை செயலாளர் பூவலிங்கம் நடுவக்குறிச்சி கிளை செயலாளர் பாலமுருகன் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.