திருப்பதிக்கு இணையாக உள்ள திருச்செந்தூர் கோவில் அடிப்படை வசதிகள் இல்லா அவலநிலை பக்தர்கள் வேதனை.

திருப்பதிக்கு இணையாக உள்ள திருச்செந்தூர் கோவில் அடிப்படை வசதிகள் இல்லா அவலநிலை பக்தர்கள் வேதனை.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆறுபடைவீடு களில் இரண்டாம் படைவீடாக விளங்கிவருகின்றது. மிகப்பெரிய சுற்றுலா ஸ்தலமாகும் இங்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர்

இங்கு வரும் பக்தர்களின் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. மாதாமாதம் கோவில் உண்டியல் வசூல் மூன்று கோடியை தாண்டி வருமானம் வருகின்றது.

கோவிலை திருப்பதி கோவிலுக்கு இணையாக அழகுபடுத்தவும், பக்தர்களுக்கு வேண்டிய தங்கும் விடுதிகள், பொது சுகாதாரம், குடிநீர் போன்ற வசதிகள், நவீனமாக்கும் விதமாக அரசு 300 கோடிக்கு திட்டப்பணிகள் செய்துவருகின்றது. ஆனால் இந்த திட்டப்பணிகள் மந்தமாக நடைபெற்று வருகின்றது. மேலும் தற்போது குடிநீர் கழிப்பிட வசதிகள், தங்கும் விடுதிகள் ஆகியவைகள் சரிவர இல்லாததால் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். 

மேலும் தரிசனம் செய்ய சுமார் 4 மணி நேரத்திற்குமேல் வரிசையில் பக்தர்கள் நின்று தரிசனம் செய்யவேண்டிய நிலை உள்ளது. திருப்பணி வேலைகள் துவங்குவதற்கு முன் பக்தர்களுக்கு செய்யவேண்டிய வசதிகள் ஏதுவும் செய்யாமல் பணிகளை ஆரம்பிக்கப்பட்டு அனைத்து இடங்களையும் இடித்து தரைமட்டமாக்கி உள்ளதால் பக்தர்கள் இருக்க இடம் இன்றி தவித்து வருகின்றனர்.

மேலும் கோவில் வளாகத்தைச் சுற்றி மாடு, நாய் போன்ற கால்நடைகள் பக்தர்களுக்கு இடையுறு செய்யும் வகையில் சுற்றிவருகின்றன.  நிர்வாகம் எவ்வித நடவடிக்கைகளும் இதுவரை எடுக்கவில்லை. மாவட்ட நிர்வாகம் மற்றும் அறநிலையத்துறை உடனடியாக பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.