ஒட்டப்பிடாரம் வடக்கு ஒன்றிய திமுக பாக நிலை (BLA 2) முகவர்கள் கூட்டம் - ஒன்றிய செயலாளர் இளையராஜா தலைமையில் நடைபெற்றது.

ஒட்டப்பிடாரம் வடக்கு ஒன்றிய திமுக பாக நிலை (BLA 2) முகவர்கள் கூட்டம் - ஒன்றிய செயலாளர் இளையராஜா தலைமையில் நடைபெற்றது.

தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு க.ஸ்டாலின் துணை முதலமைச்சரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின்ஆகியோரது ஆணைப்படி தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சரும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரருமான அனிதா ஆர் ராதாகிருஷ்ணன்ஆகியோரது அறிவுறுத்தலின்படி

ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி  ஒட்டப்பிடாரம் வடக்கு ஒன்றிய திமுக சமூக வலைதள இணைப்பிற்கான பாக நிலை முகவர்கள் (BLA2) மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஒட்டப்பிடாரம் வடக்கு ஒன்றியம் முப்பிலிபட்டி அலுவலகத்தில் வைத்து ஒட்டப்பிடாரம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் இளையராஜா தலைமையில் நடைபெற்றது. 

ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி பார்வையாளர் பெருநாழி போஸ் ஒட்டப்பிடாரம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் இளையராஜா மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் பேரின்பராஜ்மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் சின்னதுரை ஒட்டப்பிடாரம் தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் கண்ணன்   ஆகியோர் கலந்து கொண்டு ஒன்றிய நிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினர்.

மாவட்ட ஒன்றிய தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகள், பாக நிலை முகவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.