திமுக ஒன்றிய செயலாளர் இளையராஜா இல்ல திருமண விழா - எம்எல்ஏ,மேயர், அரசியல் பிரமுகர்கள் நேரில் வாழ்த்து!..

திமுக ஒன்றிய செயலாளர் இளையராஜா இல்ல திருமண விழா - எம்எல்ஏ,மேயர், அரசியல் பிரமுகர்கள் நேரில் வாழ்த்து!..

ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் இளையராஜாவின் இல்ல திருமண விழா ஒட்டப்பிடாரம் புதியம்புத்தூரில் அமைந்துள்ள எம் சி கனி திருமண மஹாலில் வைத்து நடைபெற்றது.

இந்த திருமண விழாவில் கலந்து கொள்ள வருகை தந்த விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் GV.மார்க்கண்டேயன் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கு பிரம்மாண்ட சாக்லேட் மாலை அணிவித்து ஒட்டப்பிடாரம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் இளையராஜா வரவேற்பு வழங்கினார். 

விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் GV.மார்க்கண்டேயன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் முன்னாள் ஓட்டப்பிடாரம் ஒன்றிய துணை பெருந்தலைவர் காசி விஸ்வநாதன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

இந்த திருமண விழாவில் முன்னாள் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் இம்மானுவேல்,  எப்போதுவென்றான் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முத்துக்குமார் ,மாவட்ட ஆதிதிராவிடர் அணி அமைப்பாளர் முத்துராஜ் ,குதிரைகுளம் ஊராட்சி மன்ற தலைவர் சண்முகையா,மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.