முதல்வர் மு.க.ஸ்டாலின் 70 வது பிறந்தநாள் விழா; ஊராட்சி மன்ற தலைவர் சரவணகுமார் 70 கிலோ பிரம்மாண்ட கேக் வெட்டி கொண்டாட்டம்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 70 வது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக கிழக்கு ஒன்றியத்தின் சார்பில் கிழக்கு ஒன்றிய செயலாளரும் மாப்பிள்ளையூரணி கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவருமான சரவணக்குமார் தலைமையில் தாளமுத்துநகரில் வைத்து 70 கிலோ பிரம்மாண்டமான கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.
அதனை தொடர்ந்து நேரு காலனி கிழக்கு காமராஜா் நகா் மாப்பிள்ளையூரணி பகுதியில் கிளைக் கழகங்கள் சாா்பில் திமுக கொடியேற்றி பள்ளி மாணவ மாணவியா்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் அந்தோணி தனுஷ் பாலன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ஸ்டாலின், மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து உறுப்பினா்கள் பாரதிராஜா,காமராஜ்,முன்னாள் உறுப்பினா் ஆனந்தகுமாா் சமீா்வியாஸ், நகரகிளைக் கழக செயலாளா்கள் ஜேசு,உலகநாதன்,கிராஸ்,காமராஜ் காசி,மற்றும் இராஜபாளையம்,ஆசைத்தம்பி,சந்தனராஜ்,ஆரோக்கியபுரம் மணி சவோியாா்புரம் இராயப்பன், மற்றும் மகளிர் அணியினர், கெளதம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.